ஆகஸ்ட் 14, 2020: சற்று முன்பு கிடைத்த செய்தி
கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை தற்போது மிகவும் ஆபத்தான நிலைக்குச் சென்றுள்ளதென்று அறிவிக்கப்படுகிறது.
எம்.ஜி.எம் மருத்துவமனையில் கடந்த ஒரு வாரமாக கோவிட்-19 நோய்த் தொற்றுக்குச் சிகிச்சை பெற்றுவந்த அவரது உடல்நிலை திடீரென்று மோசமாகியதால் தற்போது அவர் தீவிர மருத்துவப்பிரிவில் உயிராதார (life support) உபகரணங்களின் ஆதரவுடன் வைக்கப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேறிலிருந்து (ஆகஸ்ட் 13) அவரது நிலைமை மோசமடைந்து வருகிறது என மருத்துவமனை தெரிவிக்கிறது.