பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளார்

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளார்

Spread the love

நிபுணர்கள் அருகிலிருந்து கண்காணித்தவண்ணமுள்ளனர்

செப்டம்பர் 24, 2020; இந்திய நேரம் – இரவு 11:03: பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை, கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் மிகவும் ஆபத்தான் நிலைக்குச் சென்றுள்ளதாக எம்.ஜி.எம். மருத்துவமனையின் அறிக்கை தெரிவிக்கிறது.

ECMO மற்றும் உயிராதாரக் கருவிகளின் ஆதரவில் அவர் தொடர்ந்தும் வைக்கப்பட்டுள்ளார் எனவும் பல்துறை நிபுணர்கள் அவருக்கு அருகில் இருந்து அவரது உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் எம்.ஜி.எம். ஹெல்த்கெயர் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 22ம் திகதி, அவரது மகன் எஸ்.பி.சரண் இன்ஸ்ரகிராமில் விடுத்த அறிக்கையில், தந்தையாரது உடல்நிலை தேறிவருவதாகவும், மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவதற்கு ஆவலாகவுள்ளார் எனத் தெரிவித்திருந்தார்.

74 வயதுடைய, பாடகர் பாலா, கோவிட்-19 தொற்றிலிருந்து முற்றாக விடுபட்டுள்ள நிலையில், கடந்த வார விடுமுறையின்போது அவரது திருமண நாளை மருத்துவமனையில் வைத்துக் கொண்டாடியிருந்தார். இருப்பினும் அவரது சுவாசப் பைகள் போதுமான அளவுக்கு நிவாரணம் பெறவில்லை என சரண் தனது தொடர் அறிக்கைகளின்போது தெரிவித்திருந்தார்.

Print Friendly, PDF & Email