பழிவாங்கும் காகங்கள்!

Spread the love
உண்மைச் சம்பவம்

இந்தியாவில் மத்தியப்பிரதேசத்தில் சிவபுரி என்ற ஊரில் சிவா கிவாட் என்பவர் கடந்த மூன்று வருடங்களாக மிகவும் குழப்பத்துக்குள்ளாகியிருக்கிறார். பணக்கஷ்டம் அப்படி ஒன்றுமில்லை. அவரது பிரச்சினை காகங்கள். சில காகங்கள் எப்படியோ இவரை எதிரியாகக் கண்டுகொண்டுவிட்டன.

சிவபுரியின் சுமேலா கிராமத்தில் வாழும் இவர் வீட்டை விட்டு வெளியே இறங்கியதும் வெளியே காத்திருக்கும் காகங்கள் அவரைத் தாக்கத் தொடங்கிவிடும். அதற்காக அவர் சதா தடியொன்றுடன்தான் வெளியே போக முடியும்.

இது எல்லாம் மூன்று வருடங்களுக்கு முன்னர் நடந்த ஒரு சம்பவத்துடன் தொடங்கியது. ஒரு நாள் ஒரு காகக் குஞ்சு கூட்டில் சிக்கியிருப்பதை அவர் கண்டார். அதைக் காப்பாற்ற முயற்சிக்கும்போது அது அவர் கைகளிலேயே இறந்துவிட்டது. அவரால் எதுவுமே செய்ய முடியவில்லை.

“நான் அதற்கு உதவி செய்யவே முய்றசித்தேன் ஆனால் அது என் கைகளிலேயே இறந்துவிட்டது. ஆகாயத்தை நான் அண்ணாந்து பார்த்தபோது ஒரு பெரும் காகப் படையே வந்திறங்கியது. அவற்றுக்கு என்னால் விளங்கப்படுத்த முடிந்திருந்தால் பரவாயில்லை” என அவர் கூறினார்.

மூன்று வருடங்களுக்கு முன்னர் அக் குஞ்சு இறந்ததிலிருந்து அயலிலுள்ள காகக் குடும்பம் அவரை எதிரியாக வரித்துக் கொண்டது. என்னில் தறில்லாவிட்டாலும் அவை என்னை மன்னிக்கத் தயாரில்லை எனக் கூறுகிறார் கிவாட்.

இத்தனை வருடங்களுக்குப் பிறகும், வீட்டை விட்டு வெளியே ஒரு அடி எடுத்து வைத்ததும் அவை அவரது தலையிலும் உடம்பிலும் மாறி மாறிக் கொத்துகின்றன. அவர் தினமும் அனுபவிக்கும் துன்பம் அயலவர்களுக்கு ஒரு பொழுதுபோக்காகப் போய்விட்டது. அவரது கைகளிலும் தலியிலும் காயங்களின் தழும்புகள் தெரிகின்றன.

ஆரம்பத்தில் இதைப் பொருட்படுத்தவில்லை. அது ஒரு தற்செயலான சம்பவமென்று பேசாமல் விட்டுவிட்டார். பின்னர் தான் அவர் அறிந்தார் வேறு ஒரு அயலவர்களையும் இக் காகங்கள் கொத்தவில்லை தன்னை மட்டும்தான் தாக்குகின்றன என்பதை.

மனிதர் கண்டுபிடிப்பதற்கு முதல் ‘முகமறியும்’ தொழில்நுட்பத்தைக் (face recognition technology) காகங்கள் அறிந்துவைத்திருக்கின்றன என்ற உண்மையை அவர் இப்போதுதான் அறிந்துகொண்டார்.

எப்போ ஒருநாள் அக்காகங்களுக்கு உண்மை தெரிந்து தன்னை மன்னிக்கும் என்ற நம்பிக்கையுடன் மனிதர் இன்னும் தடியுடன் வெளியே போய்வருகிறார்.

நன்றி: ரைம்ஸ் ஒப் இந்தியா

Print Friendly, PDF & Email

Leave a Reply

>/center>