பலாலி விமானத் தளம்|பிராந்தியப் பயணங்கள் அக்டோபர் 16 இல் ஆரம்பம் -

பலாலி விமானத் தளம்|பிராந்தியப் பயணங்கள் அக்டோபர் 16 இல் ஆரம்பம்

Spread the love

2.25 பில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பலாலி விமானத் தளத்தின் முதற் கட்ட நடவடிக்கைகள் அக்டோபர் 16 இல் ஆரம்பமாகும் என போக்குவரத்து துறை அமைச்சர் அர்ஜுனா ரணதுங்க அறிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் பல இந்திய நகரங்களுக்கு இங்கிருந்து பறப்புகள் செல்லவாரம்பிக்குமெனவும் அதே வேளை உள்ளூர் விமானசேவை நிறுவனங்களுக்கே முதலிடமளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இராணுவத்தின் பாவனையில் இருந்த பலாலி தளம் பொதுமக்கள் சேவைக்காகப் புனரமைக்கப்பட்டது போலவே கட்டுநாயக்கா, மத்தள, ரத்மலான மற்றும் மட்டக்களப்பு விமான நிலையங்களும் விரைவில் புனரமைக்கப்பட்டு சர்வதேச விமான நிலையங்கள் என்ற அந்தஸ்துக்கு உயர்த்தப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
Related:  தமிழ் முன்னேற்றக் கூட்டமைப்பு வட-கிழக்கிலும் போட்டியிடும் - மனோ கணேசன்