Sri Lanka

பலத்த கட்டுப்பாடுகளுடன் பலாலி வீதி மக்கள் பாவனைக்குத் திறப்பு!

கடந்த 35 வருட காலமாக மக்கள் பாவனை மறுக்கப்பட்டிருந்த பலாலி வீதி இன்று (ஏப்ரல் 10) சில கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டிருக்கிறது. வசாவிளான் சந்தியிலிருந்து பலாலி வரையிலான 2.5 கி.மீ. தூரம் வரையிலான வீதியை எதுவித அறிவிப்புமின்றி இராணுவத்தினர் இன்று திறந்துவிட்டிருக்கின்றனர்.

இராணுவத்தினரின் இறுக்கமான கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்ட பலாலி வீதி காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மக்கள் பாவனைக்கு விடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வீதியில் மோட்டார் சைக்கிள்கள், பஸ் வண்டிகள், முச்சக்கர வண்டிகள் மற்றும் வான்கள் மட்டுமே பயணம் செய்ய முடியும். லொறிகள் பயணம் செய்ய முடியாது. வாகனங்கள் ம்ணித்தியாலத்திற்கு 40 கி.மீ இற்கு மேலாக ஓட்ட முடியாது எனவும் எக்காரணத்திற்காகவும் வாகனங்கள் இவ்வீதியில் தரித்து நிற்பது தடுக்கப்பட்டுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வீதியைப் படமெடுப்பதுவும் தடை செய்யப்பட்டுள்ளது.


மூலம்: யாழ் தீபன் / குமணன்