பருத்தித்துறை மீன்பிடித்துறைமுகத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார் -

பருத்தித்துறை மீன்பிடித்துறைமுகத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார்

Spread the love
இதுவே சிறீலங்காவின் மிகப்பெரிய மீன்பிடித் துறைமுகமாகும்

இலங்கையின் மிகப்பெரிய மீந்பிடித் துறைமுகமான பருத்தித்துறைத் துறைமுகம் ஆகஸ்ட் 30 அன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேனவினால் வைபவரீதியாகத் திறந்துவைக்கப்பட்டது.

வடக்குக் குடாநாட்டு மக்களுக்கு வாழ்வாதாரத்தைக் கொடுக்கும் நோக்குடன் நிர்மாணிக்கபட்ட இத் துறைமுகம் வட மாகாண நிலைதரு மீன்பிடி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது.

300 பெரிய இழுவைப் படகுகளை நிறுத்தக்கூடிய இத் துறைமுகத்தின் நிர்மாணத்திற்காக அண்ணளவாக 12,600 மில்லியன் ரூபாய்கள் செலவு செய்யப்பட்டது.

இத் துறைமுகம், பாதுகாப்பு வசதிகள், வலை திருத்தும் மண்டபங்கள், நிறுவைக் கருவிகளின் கட்டுப்பாட்டுச் சாதனங்கள், கடைகள், சமூக ஒன்றுகூடல் மண்டபங்கள் எனப் பலவற்றையும் கொண்டுள்ளது.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
Related:  த.தே.கூ . தலைவர் ஆர்.சம்பந்தனின் ஊடக அறிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *