பயணப் பொதியின் எடையைக் குறைக்கப் புதிய யுக்தி! -

பயணப் பொதியின் எடையைக் குறைக்கப் புதிய யுக்தி!

Spread the love
பிலிப்பினோ பயணியின் சாதனை

“அட இப்படியேன் நான் யோசிக்கவில்லை” என உங்களில் பலர் சொடுக்கிக் கொள்ளலாம். சரி, இந்தப் பெண் ரூம் போடாமலேயே யோசித்திருக்கிறாளே!

ஜெல் றொட்றீகேஸ் ஒரு பிலிப்பீனோ பெண். பயணம் செய்வதற்காக விமான நிலையத்துக்குப் போன போது அவளுடன் விமானத்தில் துணையாகப் பயணம் செய்யவிருந்த பொதியின் எடை அதிகமாகவிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு மேலதிகமாகக் கட்டணம் செலுத்த வேண்டும். அதற்கு அவளுக்கு இஷ்டமில்லை.

மாற்றீடாக அவள் செய்த விடயம் இப்போது உலகம் பேசும் வைரலான விடயம்.

மேலதிகக் கட்டணம் எதுவும் செலுத்தாமல் அவள் துணைப் பொதியில் கொண்டுவந்திருந்த பல ஆடைகளை ஒன்றன் மேல் ஒன்றாகத் தன்மேல் அணிந்து கொண்டாள். அவளின் எடை அதிகரிக்கப் பொதியின் எடை குறைந்தது. சட்டம் கழுதையாக்கப்பட்டது.

ஜெல் தனது அனுபவத்தை முகநூலில் பதிவிட்டாள். அதை 31,000 பேர் விரும்பியும், 21,000 பேர் பகிர்ந்துமிருந்தார்கள்.

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி இப் பெண்ணைத் தன் உளவுப்பிரிவில் சேர்த்துக்கொள்ளலாமா என யோசிக்கிறார் என பிலிப்பைன்ஸ் நிருபர் செய்தியனுப்புவார் என எதிர்பார்க்க வேண்டாம்.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
Related:  உலகின் அதி குள்ள மனிதர் காலமானார்!