News & AnalysisSri LankaWorld

‘பயங்கரவாதத் தடைக் கட்டுப்பாடுகள் 1/2021’ உடனடியாக நீக்கப்படவேண்டும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

கோவிட் தொற்றினால் இறந்தவர்களின் உடல்களைப் புதைப்பதற்கு இலங்கையிலுள்ள முன்னணி முஸ்லிம் அமைப்பொன்று எதிர்ப்புத்

இலங்கையில் மார்ச் 9, 2021 இல் அறிமுகப்படுத்தப்பட்ட ‘பயங்கரவாதத் தடை கட்டுப்பாடுகள் இல.1, 2021 (Prevention of Terrorism Regulations No. 01 of 2021) என்ற சட்டத்தை இலங்கை உடனடியாக மீளப்பெறவேண்டுமென மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தென்னாசியப் பணிப்பாளர் மீனாட்சி கங்கூலி தெரிவித்துள்ளார்.

மத, இன, சமூகங்களிடையே ஒற்றுமையின்மையை உருவாக்கும் வகையிலான தீவிர வன்முறை சார்ந்த சித்தாந்தங்களைக் கொண்டிருப்பவர்களைக் கைதுசெய்து ஒரு வருடத்துக்கு வழக்குப் பதிவேதுமின்றி தடுத்து வைத்திருக்கவும், அக் காலத்தை வேண்டுமானால் மேலும் ஒருவருடத்தால் நீடிக்கும் அதிகாரத்தை பாதுகாப்பு அமைச்சருக்கு வழங்குவதாகவும் இச் சட்டம் இருக்கிறது. நீக்கப்படவேண்டும் அல்லது மாற்றப்படவேண்டும் என, மனித உரிமைகள் சபையினால் கோரிக்கை வைக்கப்பட்டுள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் அதிகாரத்திற்கு மேலும் வலுவூட்டும் வகையில் இச் சட்டம் கொண்டுவரப்படுகிறது.

மத, இனக் குழுமங்கள் இலகுவாக இலக்குவைக்கப்பட்டு அவர்களது அடிப்படை உரிமைகள் மீறப்படுவதற்கான அங்கீகாரத்தை இது ஜனாதிபதி ராஜபக்சவின் அரசாங்கத்துக்கு வழங்குகிறது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கருதுகிறது என்கிறார் கங்கூலி.

இதே வேளை, இலங்கையில் எதிர்காலத்தில் மிக மோசமான மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதற்கான அடையாளங்கள் தெரிவதாகவும் அதனால் அங்கு நடைபெற்றுவரும் மனித உரிமை மீறல்களைக் கண்காணித்து பொறுப்புக்கூறலை முன்னெடுக்கும் வகையில் தீர்மானமொன்றைக் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்து இணைத்தலைமை நாடுகள் செயலாற்றிக்கொண்டிருக்கின்றன.

இதையும் மீறி, இன, மதச் சிறுபான்மையினர் மீதான அதிகார துஷ்பிரயோகங்களை மேலும் அதிகரிக்கும் வகையில் அவர்களை நீண்ட காலத்துக்குச் சிறையில் தள்ளுவதற்கான நடவடிக்கைகளில் இலங்கை அர்சு இறங்கியுள்ளது எனவும் “பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதற்குப் பதிலாக அதை மேலும் பலப்படுத்துவதில் ராஜபக்ச நிர்வாகம் பழிவாங்கும் முறையில் நடந்துகொள்கிறது” எனவும் கங்கூலி மேலும் தெரிவித்தார்.

சீனா எப்படி 1 மில்லியன் உயிகுர் சிறுபான்மை முஸ்லிம்களை முகாம்களில் அடைத்து அதீவிரமாக்கால் (de- radicalization) என்ற பெயரில் சித்திரவதி செய்கிறதோ அப்படியான ஒரு முறையையே இலங்கை அரசும் தன் சிறுபான்மையினர் மீதும் கைக்கொள்கிறது எனப்படுகிறது.

இப் புதிய சட்டத்தின்படி, “எவரும் பேச்சினாலோ அல்லது வாசிக்கப்படக்கூடிய / புரிந்துகொள்ளப்படக்கூடிய வடிவங்களிலோ, மத, இன ரீதியாக வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலோ நடந்துகொண்டால்” அவர்கள் கைதுசெய்யப்பட்டு விசாரணைகளின்றி, ஒரு வருட காலத்துக்கு, மீள்விசாரணைச் சிறை முகாம்களுக்குள் தள்ளப்படலாம். அதை மேலும் ஒரு வருடத்தால் நீடிக்கும் அதிகாரம் பாதுகாப்பு அமைச்சருக்கு (தற்போது ஜனாதிபதி) உண்டு.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும், அதுபோன்ற இதர சட்டங்களையும் பாவித்து, ராஜபக்ச நிர்வாகம், முஸ்லிம், தமிழ் சிறுபான்மைச் சமூகங்களை இலக்குவைத்துச் செயற்பட்டுவரும் அதே வேளை, இனத் துவேசத்தையும், வன்முறையையும் அவர்களுக்கு எதிராகத் தூண்டிவிடும் பெரும்பான்மைச் சமூகத்தினருக்கு எதிராக அது நடவடிக்கை எதையும் எடுப்பதில்லை என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறுகிறது.

ஏப்ரல் 14, 2020 அன்று கைதுசெய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டிருக்கும் முஸ்லிம் மனித உரிமை வழக்கறிஞர் ஹேஜாஸ் ஹிஸ்புல்லா மற்றும் மே 16, 2020 இலிருந்து சிறையில் தள்ளப்பட்டிருக்கும் முஸ்லிம் கவிஞர் அஹ்னாஃப் ஜசீம் ஆகியோர் இப்படியான சட்டங்களைப் பாவித்தே கைதுசெய்யப்பட்டார்கள்.

இலங்கையின் சிறிய கிறிஸ்தவ சமூகமும் ஒரு வகையில் இலக்குவைக்கப்பட்டுள்ளது. “முகநூலில் எதையும் எழுதிவிட முடியாத நிலை. நாங்கள் எங்கள் உணர்வுகளை வெளிப்படையாகக் கூறமுடியாது. காரணமேதுமின்றியே ஒருவர் சிறையில் தள்ளப்படலாம். எதுவும் எப்போதும் நடக்கலாம்” என ஒரு கிறிஸ்தவ மனித உரிமைகள் செயற்பாட்டாளர் குறிப்பிட்டதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறுகிறது.

இலங்கை அரசாங்கத்தின் தற்போதைய அதிகரிக்கப்படும் ஒடுக்குமுறைகள், மனித உரிமைகள் சபையினால் கொண்டுவரப்படவிருக்கும் தீர்மானம் காத்திரமானதாகவும் எதிர்கால துஷ்பிரயோகங்களைத் தடுக்கும் வல்லமை கொண்டதாகவும் இருக்கவேண்டுமென்பதை வலியுறுத்துபவனாக உள்ளன என்கிறது மனித உரிமைகள் கண்காணிப்பகம். மனித உரிமைகள் ஆணையாளர் மிஷெல் பக்கெலெயின் அறிக்கையில் சிபார்சு செய்யப்பட்டதற்கிணங்க, இலங்கை அதிகாரிகள் மீதான பயணத் தடைகள், சொத்து முடக்கம் உள்ளிட்ட, இலக்குவைக்கப்பட்ட நடவடிக்கைகளை ஐ.நா. அங்கத்துவ நாடுகள் மேற்கொள்ளவேண்டுமென அது கோருகிறது.

ஜனவரி மாதம் நடைபெற்ற சந்திப்பின்போது, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மாற்றி சர்வதேச நியமங்களுக்குள் கொண்டுவரும்படி, இரண்டாவது பெரிய வர்த்தக பங்காளியான ஐரோப்பிய ஒன்றியம், இலங்கையைக் கோரியிருந்தது. GSP+ எனப்படும் ஏற்றுமதித் தீர்வைச் சலுகையைப் பெறுவதானால் சில மனித உரிமைகள் முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் கோரிக்கைக்கு இலங்கை ஏற்கெனவே இணங்கியிருந்தது. இந்த நிலையில், புதிய சட்ட அறிவிப்புகளின் மூலம் இலங்கை மறு திசையில் செல்வதனால் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு அதுகுறித்து எச்சரிக்கவேண்டுமென மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோருகிறது. கோவிட் பெருந்தொற்று, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் ஆகியவற்றால் சுற்றுலாத்துறை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள வேளையில் அடுத்த அதிக வருமானமீட்டிவரும் ஆடை ஏற்றுமதி, ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கையால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட வாய்ப்புண்டு.

ஐக்கியநாடுகள் சபையின் போதைவஸ்து, குற்றநடவடிக்கைகளுக்கெதிரான அலுவலகம் (United Nations Office on Drugs and Crime (UNODC)), ஐரோப்பிய ஒன்றியம், இண்டர்போல் போன்ற பல அமைப்புகள் இலங்கை அரசுடன் இணந்து, தற்போது 4.5 மில்லியன் செலவில் பயங்கரவாத எதிர்ப்புத் திட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றன. இத் திட்டத்திலிருந்து இவ்வமைப்புகள் உடனடியாக விலகிக்கொள்ளவேண்டுமென்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.

“ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் ஆகியோர் அரச கெடுபிடிகளையும், மிரட்டல்களையும், கண்காணிப்புகளையும் எதிர்கொண்டுவரும் வேளையில் இப் புதிய சட்டங்கள் நிலைமைகளை மேலும் மோசமாக்குகிறது; இப்படியான துஷ்பிரயோகங்கள் நிறுத்தப்படவேண்டுமெனக் கோரும் வகையில், ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானம் அழுத்தமானதாகவும் காத்திரமானதாகவும் இருக்கவேண்டும்” என மீனாட்சி கங்கூலி கோரிக்கை விடுத்துள்ளார்.

தெரிவித்துள்ளது.  இவ் விடயம் தொடர்பாக அது உலக முஸ்லிம் அமைப்புகளான இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பு  மற்றும்  உலக முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றைத் தலையிட்டு பொருத்தமான நிலமொன்றைப்  பெற்றுத்தரும்படி வேண்டுகோள்  விடுத்துள்ளது. 

சிறிலங்கா இஸ்லாமிய நடுவமே உலக அமைப்புக்களுக்கு இம் முறைப்பாட்டைச் செய்துள்ளது. உலக முஸ்லிம் காங்கிரஸில் அங்கத்துவ அமைப்பான இஸ்லாமிய நடுவம், இதன் மூலம் இலங்கை பற்றிய முறைப்பாட்டை உலக இஸ்லாமிய நாடுகளுக்குக் கொண்டு செல்லத் தீர்மானித்துள்ளது. இரணைதீவில் உடல்களை அடக்கம் செய்ய வற்புறுத்தும் அரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி ஜெனிவாவிலுள்ள உலக முஸ்லிம் காங்கிரஸிடம் அது கேட்டுள்ளது.

கொழும்பிலுள்ள குப்பியவத்த இடுகை நிலம் மற்றும் மன்னாரில் மசூதி ஒன்றிற்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் நிலம் ஆகியவற்றைத் தமது தேவைக்காகப் பரிசீலிக்கும்படி முஸ்லிம் சமூகம் அரசாங்கத்தைக் கேட்டிருந்தது. இந் நிலங்களில் நிலக்கடி நீர் மற்றிய ஆய்வறிக்கைகளை ஏற்கெனவே பேராதனைப் பல்கலைக்கழக நிலவியல் நிபுணர்கள் தயாரித்துவைத்துள்ளனர். இவற்றில் மன்னார் நிலம் தாழ்ந்த மண்ணீர மட்டத்ஹைக் கொண்டுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

மன்னாரிலுள்ள இக் குறிப்பிட்ட நிலத்துக்குரியவர்கள் அடக்கங்கங்களைச் செய்வதற்குத் தயாராகவிருந்தனரெனவும் அதை ஏன் சுகாதார அதிகாரிகள் நிராகரித்தநர் எனவும் தமக்குத் தெரியாது என முஸ்லிம் தரப்பு தெரிவித்துள்ளது.

இதே வேளை, நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் கருத்துப்படி இரணைதீவு நிலத்தில் அடக்கம் செய்வதற்கான நிலவியல் ஆய்வு செய்யப்பட்டதாகத் தனக்குத் தெரியாது எனக் கூறியதாகத் தெரியவருகிறது. அத்தோடு, வடக்கிலொன்றும் கிழக்கிலொன்றுமாக, ஆழ் மண்ணீர் மட்டங்களைக் கொண்ட  இரண்டு நிலங்களைத் தான் நிபுணர் குழுவுக்குப் பரிந்துரைத்துள்ளதாகவும் அமைச்சர் நாணயக்கார தெரிவித்துள்ளார்.