News & AnalysisSri Lanka

பயங்கரவாதத்தை ஊக்குவித்தார்களென யாழ்ப்பாணத்தில் இரு விடுதலைப்புலி ஆதரவாளர் கைது

இணைய, யூ-டியூப் தளங்களில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பிரச்சாரத்தை மேற்கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் இருவரைப் பயங்கரவாத விசாரணைப் பொலிசார் கைது செய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் தமது இணையத் தளம், யூ-டியூப் தளம் ஆகியவற்றின் மூலமாக விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்தார்கள் என பொலிஸ் திணைக்களப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் நாவலர் வீதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஆணும், 35 வயதுடைய பெண்னும் எனவும் அவர்களது அலுவலகத்திலிருந்து 5 கணனிகள், 5 மடிக் கணனிகள் மற்றும் இதர பரிவர்த்தனை உபகரணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.