பதில் வழக்குரை நாயகம் சஞ்சாய் ராஜரத்னம் புதிய சட்டமா அதிபராகப் பதவியேற்கலாம்?

சட்டமாதிபர் டப்புல டெ லிவேராவின் பதவிக்காலம் இம் மாதத்துடன் முடிவடைவதைத் தொடர்ந்து அவரது இடத்துக்கு பதில் வழக்குரை நாயகமாகக் (Acting Solicitor General) கடமையாற்றும் சன்சாய் ராஜரத்னம் அவர்கள் நியமிக்கப்படலாம் எனத் தெரிய வருகிறது.

பொதுச் சேவைகள் ஆணையத்தால் 2019 ம் ஆண்டு, வழக்குரை நாயகம் டில்ருக்‌ஷி டயஸ் விக்கிரமசிங்க பதவி விலக்கப்பட்டதைத் தொடர்ந்து ராஜரத்னம் பதில் வழக்குரை நாயகமாக நியமிக்கப்பட்டிருந்தார். அவாண்ட்-கார்ட் ஊழலில் குற்றஞ்சாட்டப்படிருந்த அதன் தலைவர் நிசாங்க சேனாதிபதியோடு தொடர்புகளைப் பேணியிருந்த காரணத்தால் டில்ருக்‌ஷி பதவி விலக்கப்பட்டிருந்தார்.

புதிய சட்டமா அதிபராக சஞ்சாய் ராஜரத்னத்த்தின் பெயர் முன்மொழியப்பட்டிருக்கிறதென்ற செய்தியை சபாநாயகர் யாபா அபயகுணவர்த்தன உறுதிசெய்துள்ளதாக ‘நியூஸ் ஃபெர்ஸ்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது.