பதவி துறந்த முஸ்லிம் பா.உ. க்கள் மீண்டும் மந்திரிகளாகிறார்கள் -

பதவி துறந்த முஸ்லிம் பா.உ. க்கள் மீண்டும் மந்திரிகளாகிறார்கள்

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பைத் தொடர்ந்து பதவிகளைத் துறந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் 9 பேரில் 7 பேர் இன்று ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து அவர்கள் முன்னர் வகித்த மந்திரிப்பதவிகளை மீண்டும் பெற்றுக்கொள்கிறார்கள்.

ராவுப் ஹக்கீம், றிஷாட் பதியுதீன் ஆகியோர் அமைச்சரவை உறுப்பினர்களாகவும் (Cabinet Ministers) பைசால் காசிம், எச்.எம்.எம். பாரிஸ், அமீர் அலி மற்றும் அலி சாஹிர் மெளலானா ஆகியோர் உதவி அமைச்சர்களாகவும் (State Ministers), அப்துல் மஹ்ரூப் பிரதி (Deputy Minister) அமைச்சராகவும் பதை ஏற்கிறார்கள். மிகுதி இரண்டு பேர்களான காபிர் ஹஷிம், அப்துல் ஹலீம் ஆகியோர் ஜூன் மாதம் 19ம் திகதியே தாம் முன்னர் வகித்த மந்திரிப் பதவிகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டார்கள்.

அமைச்சர் பதவிகளைப் பெறாமலிருந்த மிகுதி 7 பேருக்கும் அவர்களது பதவிகளைத் திரும்பக் கொடுக்கும்படி ஜூலை 24 அன்று பிரதமர் விக்கிரமசிங்க ஜனாதிபதி சிறீசேனவைக் கேட்டிருந்தார்.

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
Related:  கோதாவின் ஆட்சி ஆரம்பம்? | எழுத்தாளரைத் தாக்கிய குண்டர்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)