NewsWorld

பங்களாதேஷ்| திருமணச் சான்றிதழிலிருந்து ‘குமரி’ என்ற சொல் நீக்கப்படவுள்ளது

27 Aug 2019:

முஸ்லிம் திருமணச் சான்றிதள்களிலிருந்து ‘குமரி’ (virgin) என்ற சொல் நீக்கப்பட வேண்டுமென அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இச் சொல் அவமானப்படுத்துவதாகவும் பாகுபாடு காட்டுவதாகவும் உள்ளது என்றும் அது திருமணச் சான்றிதழ்களிலிருந்து நீக்கப்பட வேண்டுமெனவும் செயற்பாட்டாளர்கள் அழுத்தம் கொடுத்து வந்தனர்.

பங்களாதேஷின் முஸ்லிம் திருமணச் சட்டங்களின்படி ஒரு மணப் பெண் திருமணச் சான்றிதழிலில் தரப்பட்டிருக்கும் மூன்று தேர்வுகளில் ஒன்றைத் தெரிய வேண்டும். அவை, ‘குமரி’ (virgin),விதவை (widow), விவாகரத்துப் பெற்றவர்(divorced) ஆகும்.

பங்களாதேஷ் உச்ச நீதிமன்றம்

ஞாயிறன்று நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, அரசாங்கம் திருமணச் சான்றிதழ்களிலிருந்து ‘குமரி’ என்ற பதத்தை நீக்கிவிட்டு ‘மணம் செய்யாதவர்’ (unmarried) என்ற பதத்தைப் பாவிக்கும்படி உத்தரவிட்டுள்ளது என பிரதி வழக்குத் தொடுநர் நாயகம் அமிற் தலுக்தர் தெரிவித்தார்.

 பங்களாதேஷ் உலகின் மூன்றாவது பெரிய முஸ்லிம் மக்கள் தொகையைக் கொண்ட நாடு. அதன் 95% குடிமக்கள் முஸ்லிம்கள் ஆவர்.

இப் பதம் பெண்களுக்கு அவமானத்தைத் தருவதோடு, பாகுபாடு காட்டுவதாகவும் உள்ளது எனவும் இப்பதம் நீக்கப்படவேண்டுமெனவும் கோரி மனித உரிமை அமைப்புகள் 1961 இல் இச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

“இது ஒரு மிகப் பெரிய வெற்றி” என 2014 முதல் இச் சட்டத்தை எதிர்த்து வழக்காடிவரும் வழக்கறிஞர் அய்னுன் நஹார் சித்திக்கா கூறினார்.