Spread the love

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புடன் தொடர்புடைய முக்கிய புள்ளியெனக் கூறி, ஏப்ரல் மாதம் கைதுசெய்யப்பட்டிருந்த சுங்க இலாகா அதிகாரியொருவர் சென்ற வாரம் இரகசியமாக விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

குண்டு வெடிப்பு நிகழ்ந்து ஒரு வருடம் முடிவடைந்த நிலையில், இக்கைது பெரும் ஊடக பரபரப்புடன் நிகழ்த்தப்பட்டிருந்தது. பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்னாவின் உத்தரவின் பேரில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பிரிவு 9(1) இன் கீழ் இவ்வதிகாரி கைதுசெய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு, கமால் குணரத்தனாவினாலேயே விசாரணையும் செய்யப்பட்டிருந்தார்.

ஆயினும், சுங்க அதிகாரிமீது சுமத்தப்பட்ட குற்றத்துக்கு எந்த ஆதாரத்தையும் குற்ற விசாரணைப் பிரிவால் கொடுக்க முடியவில்லை.

இதந் காரணமாக பாதுகாப்புச் செயலாளர் தடுப்புக்காவலுக்கான கட்டளையை மீறப்பெற்றுவிட்டதனால், நீதிமன்றம் இச் சுங்க அதிகாரியைக் கடந்த வாரம் விடுதலை செய்துள்ளது.



அதிகாரியைச் கைதுசெய்த குற்ற விசாரணைப் பிரிவின்மீது எந்தவித வழக்கும் பதிவுசெய்யப்படமாட்டாது என்ற முன்நிபந்தனையைப் பெற்றுக்கொண்ட பின்னரே அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இச் சுங்க அதிகாரி ஏபரம் மாதம் கைதுசெய்யப்படும்போது அவர் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தரும் ஒரு பயங்கரவாதியெனவும், ஒரு இக்கைதினைச் செய்த குற்றப்பிரிவினர் நாட்டின் பாதுகாப்பை நிலைநிறுத்தப் பாடுபடுபடும் தேசிய வீரர்கள் எனவும் ஊடகங்களுக்கு வர்ணிக்கப்பட்டிருந்தனர். விடுதலை செய்யப்படும்போது ஊடகங்களுக்கு அதுபற்றி எதுவும் அறிவிக்கப்படவில்லை.

Print Friendly, PDF & Email
Related:  A Two-Thirds Majority: The Formula For Instability - Dr. Dayan Jayatilleka