நோர்வேயைச் சேர்ந்த நடராஜா சேதுரூபன் நெல்லியடியில் கைது | விடுதலைப் புலிகளின் இணையத்தளத்துக்குப் பொறுப்பானவரெனக் குற்றச்சாட்டு!
விடுதலைப் புலிகளின் இணையத்தளத்தை உருவாக்கிய நோர்வே நாட்டைச் சேர்ந்த நடராஜா சேதுரூபன் நெல்லியடி காவல்துறையினரால் வெள்ளியன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
பணம் தருமதி தொடர்பாக தொலைபேசியில் ஒருவரை மிரட்டிய காரணத்தால் கிளிநொச்சி நீதிமன்றத்தால் பிடியாணை விடுக்கப்பட்டிருந்ததெனவும் ஆனால் அவர் நீதிமன்றத்தில் சமூகமளிக்காத காரணத்தால் கைது செய்யப்பட்டதாகவும் அறியப்படுகிறது.
ஆகஸ்ட் 8ம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைத்திருக்கும்படி உததரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நெல்லியடி காவல் துறையும், பயங்கரவாதப் புலனாய்வுத் துறையும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.