நோர்வேயின் அனுசரணையில் கிளிநொச்சியில் மிதக்கும் மின்னாலை!

Spread the love
மிதக்கும் ஒளித்தகடுகள்சூரிய வெளிச்சத்திலிருந்து 42 K.W. மின்சக்தியைப் பிறப்பிக்கும்

ஜனவரி 22, 2020

நோர்வே தூதுவர் ஜோரான்லி எஸ்கெடல்

இலங்கையின் முதலாவது மிதக்கும் மின்னாலை ஒன்று, இலங்கைக்கான நோர்வே நாட்டின் தூதுவர் ஜோரான்லி எஸ்கெடல் அவர்களால் கிளிநொச்சியில் திறந்துவைக்கப்படவுள்ளது என நோர்வேயின் கொழும்புத் தூதரகம் இன்று தெரிவித்துள்ளது.

மிதக்கும் ஒளித்தகடுகளைக் கொண்ட இம் மின்னாலை சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றித் தர வல்லது. கொழும்பிலுள்ள ரோயல் நோர்வேஜியன் தூதரகத்தின் ஆதரவில், கிளிநொச்சியிலுள்ள யாழ். பல்கலைக் கழகத்தின் பொறியியல் வளாகமும் மேற்கு நோர்வேயிலுள்ள பிரயோக விஞ்ஞான வளாகமும் இணந்து 2017 இலிருந்து மேற்கொண்டுவந்த ஆராய்ச்சியின் பயனாக இம் மின்னாலை உருவாக்கப்பட்டது.

தூய வலுவை (clean energy) வழங்குவதால் வறுமை ஒழிக்கப்படுவதோடு, சுகாதாரத்தை முன்னேற்றவும், காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தவும் முடியுமென நோர்வே நம்பிக்கை கொண்டுள்ளதெனவும், நிலைக்கக்கூடிய வலுவுற்பத்தியைத் தருவதற்கு தனியார் துறையின் தலையீடு அவசியம் எனவும் எதிர்வரும் நிகழ்வு பற்றிப் பேசும்போது நோர்வே தூதுவர் குறிப்பிட்டார்.


“நோர்வேஜியன் சோலர் ஃபுளோட்ஸ்” ( Norwegian Sola Floats) என்ற பெயரில் சந்தைபடுத்தப்படும் இத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு பல்கலைக்கழகங்களினதும், நோர்வேயின் தனியார் நிறுவனங்களினதும் ஒருங்கிணைந்த பங்களிப்பு கிடைத்திருக்கிறது.

பென்ஜா, அல்பேனியாவில் அமைக்கப்பட்டுள்ள சூரிய மின்னாலை

நோர்வே அரசாங்கத்தின் ஒரு அங்கமான, ‘எக்குவினோர் அண்ட் இனொவேசன் நோர்வே’ (Equinor and Innovation Norway) என்ற மின்வலு நிறுவனமும் இத் திட்டத்திற்கான ஆதரவை வழங்கியிருக்கிறது. இது ஒரு மாதியானது (pilot) மட்டுமே. முற்றான சூரிய ஒளிப்படுகையின்போது இது 42 கி.வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய வல்லது.

நோர்வேயின் கடலனுபத்தையும், நீர்வளத் தொழிலனுபவங்களையும் மூலமாகக் கொண்டு இந்த மிதக்கும் மின்னாலை ஒளித்தகடுகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வெள்ளியன்று (ஜனவரி 24) இம் மின்னாலை நோர்வே தூதுவரால்,பயன்பாட்டுக்காகத் திறக்கப்படவுள்ளது.

Print Friendly, PDF & Email
Related:  கோவிட்-19 | முன்னறிவித்தல் தரும் ஸ்மார்ட் எலெக்ட்றோணிக்ஸ்

Leave a Reply

>/center>