நூலறிமுகம்: நாடகர் பாலேந்திராவின் ‘அரங்க நினைவலைகள்’

கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக அரங்கமே தன் கலை வீடாகக்கொண்டு பல பிரமாண்டமான அரங்க நிகழ்வுகளைத் தயாரித்து, நடித்து கலைப்பணியாற்றிவரும் பாலேந்திரா, ஆனந்தராணி தம்பதியினரின் கலைப்பயணத்தின் தடயங்களைக் காவிவரும் நூலான அரங்க நினைவலைகள், மே 14, 2023 ஞாயிறு அன்று ஸ்காபரோ மார்க்கம் / எக்லிங்டன் சந்திப்பிலுள்ள ஸ்காபரோ விலேஜ் தியேட்டரில் பி.ப. 4:00 மணிக்கு வெளியிடப்படவிருக்கிறது. இந்நிகழ்வின்போது இக்கலைத் தம்பதியினரின் “அரங்க நினைவலைகள்” என்ற ஆற்றுகை நிகழ்வொன்றும் இடம்பெறவுள்ளது.