Spread the love

தேர்தலின் போது வடக்கு கிழக்கில் இராணுவத்தினரை முகாம்களில் தங்கவைத்துக் கொள்ளுங்கள் என நீதியரசர் ஜனாதிபதியிடம் கோரிக்கை

ஆகஸ்ட் 5 இல் நாடெங்கும் நடைபெற்விருக்கும் பாராளுமன்றத் தேர்தல்கள் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடத்தப்படவேண்டுமானால் படைகளைத் தேர்தல்களின்போது முகாம்களுக்குள் வைத்துக்கொள்ளுங்கள் எனக் கேட்டு நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்கள் ஜனாதிபதி ராஜபக்சவுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

“ஜூலை 28 அன்று குருநகரில் நடந்த எனது தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் ஒரு ஆச்சரியமான சம்பவம் நிகழ்ந்தது. இரவு 8 மணிபோல் 14 இரானுவத்தினர், கறுப்பு சீருடைகளில் (கறுப்பு பூனைகளாக இருக்கலாம்?), 7 மோட்டார் சைக்கிள்களில் கூட்ட மைதானத்திற்கு வந்து, தமது எஞ்சின்களின் சத்தத்தைக் கூட்டி, கூட்டத்தில் குழப்பத்தை விளைவித்தனர். நான் கூட்டத்திலிருந்து புறப்படவும் அவர்களும் அவ்விடத்தை விட்டு நீங்கினர். பின்னர் எனது வாகனத்தைச் சூழ்ந்து தெருவிலும் தமது அட்டகாசத்தைத் தொடர்ந்தனர். எனது வாகனத்துக்கு முன் தெருவில் ஒரு வரிசையில் தமது மோட்டர் சைக்கிள்களைச் செலுத்தி எனது வாகனத்தின் வேகத்தை வேண்டுமென்றே குறைத்தார்கள். இந்த்தனைக்கும், எனது பாதுகாப்பு பொலிசார் எனது வாகனத்துக்குள் இருந்தனர். இதன் மூலம் எனக்கு ஏதாவது செய்தியைச் சொல்ல அவர்கள் முயன்றிருக்கலாம். இதனால் எனக்கு எந்த தீங்கையும் செய்ய அவர்களால் முடியாது. ஆனால் வாக்களிக்கும் மக்கள் குழப்பமடைந்து வாக்களிக்கும் எண்ணிக்கை குறைய வாய்ப்புண்டு.

இந்த சம்பவத்தை விசாரித்து, நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நம்புகிறேன். இராணுவத்தின் பிரசன்னத்தால் குழப்பங்களுக்குள்ளாகாமல், வடக்கில் நடைபெறும் பாராளுமன்றத் தேர்தல்கள் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுமென்று நம்புகிறேன்.” என நீதியரசர் விக்கினேஸ்வரன் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Print Friendly, PDF & Email
Related:  Press Statement | Global Tamil Forum