நிஷாந்த சில்வாவைத் திருப்பி அனுப்பும்படி சுவிஸ் நாட்டிடம் இலங்கை கோரிக்கை -

நிஷாந்த சில்வாவைத் திருப்பி அனுப்பும்படி சுவிஸ் நாட்டிடம் இலங்கை கோரிக்கை

Spread the love
லசாந்த மற்றும் முக்கிய கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய தகவல்களுடன் அவர் தப்பிச் சென்றுள்ளார்?

ஒரு உயர் பதவியிலிருந்த அரச அதிகாரி முன்னறிவித்தல் எதுவுமில்லாது நாட்டை விட்டுச் சென்றது தவறு எனச் சுட்டிக்காட்டி, சுவிஸ் நாட்டில் குடும்பத்தினருடன் அகதி நிலையைக் கோரியுள்லதாகக் கருதப்படும் முன்னாள் இலங்கை காவற்துறை அதிகாரி நிஷாந்த சில்வாவைத் திருப்பி அனுப்ப வேண்டுமென்று இலங்கை அரசு சுவிஸ் நாட்டிடம் கேட்டுள்ளது.

சென்ற மாதம் குற்ற விசாரணைப் பிரிவைச் சேர்ந்த பணிப்பாளர் ஷானி அபயசேகரா திடீரெனப் பணி மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து நிஷாந்த சில்வா தன் குடும்பத்துடன் சுவிட்சர்லாந்திற்குச் சென்று அங்கு அகதிநிலை கோரியுள்ளதாக நம்பப்படுகிறது.

லசாந்தா விக்கிரமதுங்க கொலை, கீத் நொயாஹர் மீதான தாக்குதல் உட்படப் பல முக்கியமான குற்ற விசாரணைகள் தொடர்பான ஆவணங்களை சில்வா தன்னுடன் எடுத்துச் சென்றுள்ளதாகவும் அவை எதிர்வரும் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்பட்டால் இலங்கை அரசாங்கத்தை இக்கட்டான நிலைக்குள்ளாக்கலாமென இலங்கை அரசு அஞ்சுவதாகவும் தெரியவருகிறது.

நிசாந்த சில்வா தப்பியோடிய விடயத்தில் உதவியதற்காகவே சுவிஸ் தூதரக ஊழியர் கடத்தப்பட்டு விசாரிக்கப்பட்டர் எனவும் பரவலாகப் பெசப்படுகிறது.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
Related:  சுவிஸ் தூதரக ஊழியர் பிணையில் விடுதலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *