நியூ யோர்க்: எழுத்தாளர் சல்மான் ருஷ்டி கத்திக்குத்துக்குள்ளானார்
தாக்கியவரைப் புகழும் ஈரானிய ஊடகங்கள்
இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி நியூ யோர்க்கில் இலக்கிய நிகழ்வொன்றில் கலந்திஉகொண்டிருந்தபோது மேடையில் வைத்து ஒருவரால் கத்தியால் குத்தப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிக்கிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைத் தாக்கிய 24 வயது நியூ ஜேர்சி வாசியான ஹாடி மதார் கைது செய்யப்பட்டுள்ளார்.
‘சாத்தானின் வாசகங்கள்’ (Satanic Verses) என்ற பெயரில் சல்மான் ருஷ்டி எழுதிய நூல் ஒன்றில் அவர் முகம்மது நபியை விமர்சித்திருந்த காரணத்துக்காக அவர் உயிரை எடுப்பவருக்கு 1 மில்லியன் டாலர்கள் சன்மானம் தருவதாக 30 வருடங்களுக்கு முன்னர் ஈரானிய மதத் தலைவரான அயத்தோல்லா கொமேனி அறிவித்திருந்தார்.
ருஷ்டியின் மீது மேற்கொள்ளப்பட்ட இத் தாக்குதலை உலகம் முழுவதுமே கண்டித்துவரும் வேளையில் ஈரானிய ஊடகங்கள் பல இத் தாக்குதலை நடத்தியவரைப் புகழ்ந்து செய்திகள் வெளியிட்டு வருகின்றன.
கத்திக் குத்துச் சம்பவத்தைத் தொடர்ந்து ஈரல் பாதிக்கப்பட்ட நிலையில் சல்மான் ருஷ்டி உயிராபத்தான நிலையில் மருத்துவமனையில் உயிராதார இயந்திரம் பொருத்தப்பட்ட நிலையில் இருப்பதாகத் தெரியவருகின்றது. நிகழ்வின்போது ருஷ்டியைப் பேட்டிகண்ட ஒருவரும் தாக்கப்பட்டுள்ளார் என்றும் இதன காரணமாக அவ்ர் ஒரு கண் பார்வையை இழக்கக்கூடிய நிலைமை இருக்கிறதென்றும் அறியப்படுகிறது.
ஹாடி மாதரின் முகநூல் பதிவுகளை ஆராய்ந்த பொலிசார் அவர் இஸ்லாமிய தீவிரவாத்த்தால் கவரப்பட்ட ஒருவர் எனவும் ஈரானியர் பின்பற்றும் மதப் பிரிவான ‘ஷியா’ பிரிவைப் பின்பற்றும் தீவிர மதவாதி எனவும் அறியப்படுகிறது.