நியூ யோர்க்கில் 4 தெருவாசிகள் அடித்துக் கொலை! -

நியூ யோர்க்கில் 4 தெருவாசிகள் அடித்துக் கொலை!

இன்னுமொரு தெருவாசியான 24 வயது சந்தேகநபர் கைது

அக்டோபர் 5, 2019

நியூ யோர்க்கின் கிழக்கு புறோட்வே பகுதியிலுள்ள சைனா ரவுணில் இன்று அதிகாலை 2 மணியளவில் தெருவோரத்தில் உறங்கிக்கொண்டிருந்த மூன்று தெருவாசிகளை ஒருவர் இரும்புக் கம்பியினால் தாக்கிக் கொலை செய்துள்ளாரென நியூ யோர்க் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கொலையாளி பின்னர் வடக்குப் பக்கமாகச் சென்று அங்கு மேலும் இருவரைத் தாக்கியதில் ஒருவர் மரணமடைந்தும் மற்றவர் இன்னும் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதாகவும் தெரிகிறது.

கொலையாளியும் ஒரு தெருவாசியெனவும் கொலைகள் நடைபெற்றுச் சில நிமிடங்களில் அவர் கைதுசெய்யப்பட்டு விட்டதாகவும் காவற்துறை மேலும் தெரிவிக்கிறது.

நியூ யோர்க் மாகாணம் சமீப காலங்களில் துரிதமான பொருளாதார வளர்ச்சியைக் கண்டுவருகிறது. இதனால் நியூ யோர்க் நகரம் நோக்கிய தெருவாசிகளின் வரவும் அதிகரிக்கிறது. நகரின் 8.5 மில்லியன் மக்களில் 121 பேருக்கு ஒருவர் தெருவாசியாக இருக்கிறார். தெருவாசிகள் பாதுகாப்பாகத் தங்குவதெற்கென நகராட்சி, நகரம் முழுவதும் உறைவிடங்களை உருவாக்கியுள்ள போதிலும் பெரும்பாலோர் தெருக்களில் வசிப்பதையே விரும்புகின்றனர்.

ஆண், பெண், குழந்தைகள் எனப் பலதரப்பிலும் ஏறத்தாழ 63,000 தெருவாசிகள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் உறைவிட முகாம்களில் தங்கினாலும் ஏறத்தாழ 3600 பேர் தெருக்களிலும், பொதுவிடங்கள், சுரங்க ரயில் நிலையங்கள் போன்றவற்றில் வசிக்கின்றனர்.

Please follow and like us:
error0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *