EditorialSri Lankaதலையங்கம்

நினைவு கூர்கிறோம்

தியாகிகளை நினைவுகூர்கிறோம்

தலையங்கம்

எமது இனத்தின் விடுதலைக்காகப் போராடப் புறப்பட்டு இன்னுயிர்களை அர்ப்பணித்தவர்களை உலகம் முழுவதிலுமுள்ள தமிழர்கள் இன்று நினைவு கூர்கிறார்கள்.

நாஜிகளின் ஆக்கிரமிப்பில் உலகம் வீழ்ந்துவிடக் கூடாது என்பதற்காக சமுத்திரங்களைத் தாண்டிப் பல நல்ல உள்ளங்கள் ஐரோப்பிய மண்ணில் மடிந்தார்கள். நம்மில் பெரும்பாலோர் வாழும் மேற்கு நாடுகள் அவர்கள வருடந்தோறும் நினைவுகூர்ந்து நன்றியைத் தெரிவிக்கிறார்கள். பிறரது நல்வாழ்வுக்காகத் தம்முயிரை அர்ப்பணித்தவரை நினைவுகூர்வது நியாயம், தர்மம்.

பல்லாயிரக் கணக்கான அப்பாவித் தமிழர்களைக் காவுகொண்ட போர் முடிவுற்று தமிழர்களைக் கையேந்தும் நிலையில் கண்டபின்னரும் கொலைவெறி கொண்டலையும் சிங்களத் தேசியம் இந்த வருடம் வடக்கு கிழக்கில் மாவீரர்களை நினைவுகூர அனுமதிக்கவில்லை என்பது மட்டுமல்ல சமூகவலைத் தளங்களில் புகழ்பாடியவர்களைக் கைதுசெய்யுமளவுக்கு வந்துள்ளது. வருடா வருடம் போர் வெற்றியக் கொண்டாடி மகிழும் இவர்கள் போரிழப்புகளை நினைவுகூர்வதைத் தடுப்பதில் இன்பம் காண்பது ஒரு மனப் பிறழ்வு. அதற்கான மருந்தை இயற்கை கொடுக்கட்டும்.

இன்றைய தினத்தில் தியாகிகளை நினைவுகூர்கிறோம்.

மனமே உடல் என வாழ்ந்து காட்டிய சாந்தி அம்மா மறைவு!