Spread the love

ஜூலை 10 அவரது 164 வது பிறந்தநாள்

நவீன உலக இயக்கத்தின் மூலாதாரமாக விளங்கும் மின்சக்தியின் தந்தை எனப்படும் நிக்கோலா ரெஸ்லா வாழ்ந்திருந்தால் நேறு (ஜூலை 10) அவர் தனது 164 வது பிறந்த நாளைக் கொண்டாடியிருப்பார். அவர் பெற்றுத் தந்த இந்த செயற்கை ஒளியையும், மின்சாரத்தையும் கொண்டு அவருக்கு நன்றி தெரிவிப்பதும் ஒரு வகையில் பொருத்தமானதே.

நிக்கோலா ரெஸ்லா சேர்பியா நாட்டில் பிறந்த ஒரு விசித்திரமான மேதை. அமெரிக்காவில் அவரது முதலாளியான தோமஸ் எடிசன் என்றொரு இன்னுமொரு விஞ்ஞானிக்கு வேலை செய்யும்போது தான் அவர் மின்சாரத்தைக் கண்டு பிடித்தார்.

உண்மையில் ரெஸ்லாவும், எடிசனும் தனித்தனியாக மின்னுற்பத்தியில் ஆராய்ச்சிகளைச் செய்திருந்தார்கள். இருவரும் தனித்தனியாக இரண்டு வகையான மின்சாரத்தைக் கண்டுபிடித்தார்கள். ரெஸ்லாவின் மின்னுற்பத்தி முறையை மாறுதிசை மின்னோட்டம் (alternating-current (AC)) என்றும், எடிசனின் மின்னுற்பத்தி முறையை நேரடி மின்னோட்டம் (direct-current (DC)) என்றும் அழைப்பார்கள். மிதி வண்டியில் டைனமோவிலிருந்து உற்பத்தியாகும் மின்னோட்டம் AC எனவும், டோர்ச் லைட் (ஃப்ளாஷ் லைட்) இல் பற்றரியிலிருந்து உற்பத்தியாகும் மின்னோட்டம் DC எனவும் உதாரணமாகக் கூறலாம்.

எடிசன் வேறு பல கண்டுபிடிப்புக்களையும் செய்திருக்கிறார். மின் குமிழ், ஒலிப் பதிவு, திரைப் படம் போன்ற தொழில்நுட்பங்கள் இவரின் கண்டுபிடிப்புகளில் முக்கியமானவை.

இவர்கள் இருவருக்குமிடையில் போட்டிகள் நிலவின எனவும், ரெஸ்லாவின் பல கண்டுபிடிப்புக்களை எடிசன் தனதாக்கிக் கொண்டார் எனவும், ரெஸ்லாவின் சில கண்டுபிடிப்புக்களை எடிசன் அழித்துவிட்டார் எனவும் பல கதைகள் உண்டு. எடிசன் தனது கண்டுபிடிப்புக்களின் மூலம் பணம் பண்ணுவதே குறியாயிருந்தார் எனவும், ரெஸ்லா மனித மேம்பாட்டுக்காகத் தனது கண்டுபிடிப்புக்களை உபயோகப்படுத்த வேண்டுமென விரும்பினார் எனவும் அறியப்படுகிறது.ரெஸ்லா பிறப்பில் அதி விவேக, அதி ஞாபகசக்தியுடனான ஒரு ‘அதி மானுட’ சக்தியைக் கொண்டிருந்தவர் என அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் குறிப்பிடுகிறார். இன்றய மருத்துவ அளவுகோல்களின்படி அவருக்கு ஆட்டிசம் எனப்படும் மதியிறுக்கம் இருந்ததாகவும் சிலர் கருதுகிறார்கள். நியூ யோர்க்கில் அவர் தங்கியிருந்த அறைக்குப் பக்கத்தில் வாழ்ந்தவர்கள் பல விசித்திரமான அமானுஷ்யமான நிகழ்வுகளையும், அதிர்வுகளையும் உணரக்கூடியதாக இருந்தது எனவும் அவரது வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது கண்டுபிடிப்புகள் பல அவருக்குக் கிடைக்கும் ஞான ஒளியின் பின்னதாகவே செயல் வடிவத்துக்கு வந்தன எனவும் கூறப்படுகிறது. ஏனைய விஞ்ஞானிஅளைப் போல் அவர் ஆய்வு கூடங்களில் தனது கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவது குறைவு எனவும், எடுத்தவுடன் கற்பனையிலிருந்தே அவர் தனது கண்டுபிடிப்பைச் சில வரைபடங்களில் வரைவதும் உடனேயே அவ்வியந்திரத்தின் செயற்படும் மாதிரியை (working prototype) செய்துவிடுவார் எனவும் கூறப்படுகிறது.

Related:  சந்திரயான்-2 | தரை வாகனம் (rover) பாதுகாப்பாக இருக்கிறது - சண்முகா சுப்ரமணியன்

ரெஸ்லா ஒரு அமானுஷ்யப் பிறவியாகவிருந்து பல அற்புதமான கண்டுபிடிப்புகளைச் செய்திருந்தும், எடிசன் 1093 உரிமங்களுக்கும் (patents) ரெஸ்லா 300 க்கும் குறைவான உரிமங்களுக்கும் சொந்தக்காரராக உள்ளனர்.

இன்று உலகை ஒளிமயமாக்கிவரும் ரெஸ்லாவின் கண்டுபிடிப்பான மின்பிறப்பாக்கி (generator) யின் முதல் இயந்திரம் கனடாவின் நயாகரா நீர்வீழ்ச்சியில் இருக்கிறது.

அத்தோடு, கம்பிகள் இல்லாமலேயே மின்சாரம், ஒலி, ஒளிப்படம் ஆகியவற்றை அனுப்புவதற்கான (இன்றைய தொலைத் தொழில்நுட்பம்) தொழில்நுட்பத்தையும் ரெஸ்லா அப்போதே கண்டுபிடித்திருந்தார் எனவும், அதன் மூலம் பாவனையாளரிடம் பணம் அறவிட முடியாது என்பதனால் அத் தொழில்நுட்பத்தை எடிசன் செயற்பாட்டுக்குக் கொண்டுவர மறுத்துவிட்டார் எனவும் கூறப்படுகிறது. ” மீட்டர் இல்லாமல் நான் எப்படிப் பணத்தை அறவிட முடியும்” என எடிசன் கூறியதாகவும், அதாவது கம்பிகளின் வழியே அனுப்பப்படும் மின்சாரம் மீட்டர் வழியே பாய்வதால் பாவனையை அளந்து அதற்கேற்பக் கட்டணத்தை அறவிடும் வழக்கத்தை எடிசன் அறிமுகப்படுத்தியிருந்தார் எனவும் கூறப்படுகிறது.ரெஸ்லாவும் சுவாமி விவேகானந்தரும்

ரெஸ்லாவின் சிந்தனையில் இந்திய வேதாந்தத்தின் கூறுகள் அடிக்கடி குறுக்கிட்டன என்பதற்கு அவருக்கும் சுவாமி விவேகானந்தருக்குமிடையிலான ஊடாடல்கள் சான்றுகளைத் தருகின்றன. 1895 இல் சுவாமி தனது ஆங்கிலேய நன்பருக்கு எழுதிய கடிதத்தில் ரெஸ்லாவைக் குறிப்பிட்டு, “சடப் பொருளும், விசையும், சக்தியாக மாற்றப்படக் கூடியன என ரெஸ்லா பரிசோதனையின் மூலம் நிரூபிக்கலாம் என்கிறார். அது உண்மையானால் வேதாந்த பிரபஞ்சவியல் உறுதியான அடித்தளத்தை எட்டி விடும். நான் அவரை அடுத்த வாரம் சந்திக்கப் போக்கிறேன்” எனக் கூறியிருக்கிறார்.

சடப் பொருளைச் சிறியதாக்கிக்கொண்டு போனால் அது சக்தியாக மாறிவிடும் என்ற தத்துவத்தை கணித ரீதியாக ரெஸ்லா நிறுவிய பின்னர் அதை ஆய்வுகூடத்தில் நிறுவிக்காட்டுவதற்கு சுவாமியை அழைத்திருந்தும் அதை நிரூபிக்க அவரால் முடியவில்லை எனக் கூறப்படுகிறது. இதே தத்துவத்தைத் தான் ஐன்ஸ்டீனும் E=mC2 சமன்பாட்டின் மூலம் கணித ரீதியாக நிறுவியிருந்தார்.

வேதாந்த பிரபஞ்சவியலில் கூறப்படும் சக்திக்கும் (energy) சிவத்துக்கும் (mass) இடையிலான பரஸ்பர மாறு நிலைகளை ஆய்வுகூடத்தில் செய்துகாட்ட முடியுமென ரெஸ்லா நம்பியிருந்திருக்கலாம். இப் பரிசோதனைகளைப் பற்றி விபரிக்கும்போது ரெஸ்லா சமஸ்கிருதச் சொற்களான பிராண, ஆகாச என்ற இருநிலைகளை energy and mass எந்னும் பதங்களுக்குப் பதிலாகப் பாவித்தார் என அறியப்படுகிறது.

ரெஸ்லாவின் பல பரிசோதனைகள் நிரூபிக்கமுடியாமல் போனதற்கு அவரது ஆய்வுகூடங்களுக்கு நிதியுதவியைச் செய்துகொண்டு வந்த ஜே.பி.மோர்கன் போன்ற நிதி நிறுவனங்களும் ஒரு காரணம். அவர்கள் தமது முதலீடுகளுக்கு உடனடியாகப் பணம் மாற்றீடு செய்யபடவேண்டுமென எதிர்பார்த்தார்கள். ஆனால் ரெஸ்லா தனது வேதாந்த ஆராய்ச்சியில் அதிக கவனம் செலுத்தினார்.

Related:  இந்தியாவில் 'டிஜிட்டல் மயமாக்கும்' பணிகளுக்கு கூகிள் 10 பில்லியன் டாலர்களை ஒதுக்குகிறது

இத்தனை கண்டுபிடிப்புக்களையும் செய்த அந்த மேதை 20 ஆம் நூற்றாண்டில் ஏறத்தாழ காணாமலே ஆக்கப்பட்டுவிட்டார். 1943 இல் அவர் இறக்கும்போது அவர் ஒரு சத்மேதும் இல்லாதவராக, வீடற்றவராக நியூயோர்க் ஓட்டல் ஒன்றில் இறந்தார். அவரது மின்பிறப்பாக்கிகள் உலகம் முழுவதும் இன்னும் சுழன்றுகொண்டு உலகை ஒளிமயமாக்கிக்கொண்டிருக்கின்றன.

-மாயமான்


Print Friendly, PDF & Email