நிகழ்வு | சிவசேகரம் கவிதைகள்
Zoom நிகழ்வு விபரம் காலம் 22 January 22 ( Saturday ) 2.30 PM London,3.30 PM Europe ,8.00 PM Sri
கவிதைப் பாடல்- சிவசேகரத்தின் கவிதையொன்றின் முதல் பகுதியை , வாசுகி ஜெயபாலன் பாடுகிறார்……
எதிர்வரும் சனிக்கிழமை நிகழ்வில் அவரது பல பாடல்கள் இடம் பெற உள்ளன

முட்கம்பித் தீவு
தட்டிக் கேளுங்கள் …
விடுதலை வென்று தருவோமென்று வழிபல சொன்னார்கள்―
நல்ல வெகுசன அரசியல் பாதை தவிர்ந்த வழிவகை சொன்னார்கள்―
வெல்லும் விதவிதம் சொன்னார்கள்
கடல்பல தாண்டி நெடுதொலை நின்று துணை வரும் என்றார்கள்―
மக்கள் கைகளின் ஆற்றல் சிந்தனை செய்திறன் பயனில்லை என்றார்கள்―
அரசியல் படித்தவர்க் கென்றார்கள்
தேர்தலில் தம்மைத் தெரிந்து அனுப்பின் போதியதென்றார்கள்―
கற்றுத் தேர்ந்தவர் தமிழர் சார்பினிற் பேசின் சரிவரும் என்றார்கள்―
பகைவர் சரிகுவர் என்றார்கள்
பாராள்மன்றப் பாதை பிழைத்தால் அறப்போர் என்றார்கள்―
காந்தி பாரத நாட்டின் விடுதலை வென்ற பாதையதென்றார்கள்―
அமைதிப் போர்முறை என்றார்கள்
அறவழிப் போரும் அறுந்து விழுந்தால் மறவழி என்றார்கள்―
பழைய புறநானூற்றின் பாடல்கள் சொல்லும் மரபது என்றார்கள்―
மானம் பெரிதெனச் சொன்னார்கள்
திறனுடன் சிலபேர் போரிடின் திண்ணம் விடுதலை என்றார்கள்―
அந்த விடுதலை வெல்லத் தலைவர்கள் உள்ளனர் வழிவிடும் என்றார்கள்―
அவரை வழிபடும் என்றார்கள்
தலைவர்கள் மொழிவன தவறெனச் சொல்வோர் துரோகிகள் என்றார்கள்―
அயலார் நுழைவது கேடென விளக்க முயல்வோர் தீயவர் என்றார்கள்―
அவர் சொல் தீதெனச் சொன்னார்கள்
கொலைகள் மலிந்தன மனிதர் அழிந்தனர் விடுதலை வரவில்லை―
வீணே அழிவு மிகுந்தது சிதைவு தொடர்ந்தது உயர்வெதும் வரவில்லை―
மக்கள் உய்வுற வழியில்லை ………….. …………..
2010 | முட்கம்பித் தீவு Zoom நிகழ்வு விபரம் காலம் 22 January 22 ( Saturday ) 2.30 PM London,3.30 PM Europe ,8.00 PM Sri Lanka & India, 9.30 AM Canada
இணைப்பு: https://www.facebook.com/mahroof.fauzer/videos/1013741499484624/
ஆர்வமுள்ளோர் பகிர்ந்து கொள்ளுங்கள்