‘நாஷனல் ரைபிள் அஸோசியேசன்’ ஒரு பயங்கரவாத அமைப்பு – சான் பிரான்சிஸ்கோ பிரகடனம்!

Spread the love

செப்டம்பர் 5, 2019

அமெரிக்காவில் சான்பிரன்சிஸ்கோ நகரின் நகராட்சி அரசு ‘நாஷனல் றைபிள் அஸோசியேசன் (NRA) எனப்படும் அமெரிக்காவின் துப்பாக்கிதாரிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பை ஒரு உள்நாட்டுப் பயங்கரவாத அமைப்பெனப் பிரகடனம் செய்துள்ளது.

அமெரிக்காவின் அதி பலம் வாய்ந்த, அர்சியல்வாதிகளிடம் செல்வாக்குப்பெற்ற அமைப்பான என்.ஆர்.ஏ., அமெரிக்க குடிமக்கள் பகிரங்கமாகத் துப்பாக்கிகளைக் காவித்திரிவதற்கு அனுமதிக்க வேண்டுமென அமெரிக்க அரசியலமைப்பின் இரண்டாவது திருத்ததிற்கமைய அழுத்தம் கொடுக்கும், அரசியலைச் செய்துவரும் ஒரு தேசிய அமைப்பாகும்.

அமெரிக்காவில் நாடு தழுவிய ரீதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பல நடைபெற்றாலும், பல்லாயிரக்கணக்கான பெரியவர்கள், பெண்கள், குழந்தைகள் கொல்லப்பட்டாலும் இந்த அமைப்பு தம் பண, அரசியல் பலங்களை வைத்துக்கொண்டு மத்திய, மாநில அரசுகளைத் தம்பக்கம் சாய்த்துக்கொண்டுள்ளது. ஹொலிவூட் நடிகர்கள் சாள்டன் ஹெஸ்டன், கிளிண்ட் ஈஸ்ட்வூட் போன்ற பல பிரபலங்கள் இந்த அமைப்பில் அங்கத்தவர்களாக இருக்கின்றார்கள்.

கலிபோர்ணியா மாநிலமும், அதிலடங்கும் சான் பிரான்சிஸ்கோ போன்ற பல நகரங்களும் ஓரளவு மனிதநேயமுள்ள கொள்கைகளை வரித்துக்கொண்ட அரசுகளைக் கொண்டவை. கடந்த ஜூலையில், சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற கில்றோய் உள்ளித் திருவிழாவில் (Gilroy Garlic Festival) நடைபெற்ற சூட்டுச் சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நகராட்சி அரசு இத் தீர்மானத்தை எடுத்திருக்கிறது.

அமெரிக்காவில் நடைபெறும் சூட்டுச் சம்பவங்கள் என்.ஆர்.ஏ. யின் உணர்ச்சிவசப்பட வைக்கும் பேச்சுக்களால்தான் தூண்டப்படுகிறது என பரவலான கருத்து நிலவுகிறது. சாதாரண பெருமங்காடிகளில் இலகுவாகத் துப்பாக்கிகளை வாங்கக்கூடிய வசதி அமெரிக்காவில் மட்டுமே உண்டு. இதற்குக் காரணம் என்.ஆர்.ஏ. என சான்பிரான்சிஸ்கோ நகராட்சித் தீர்மானம் கூறுகிறது.

என்.ஆர்.ஏ. யுடன் வியாபாரத் தொடர்புகளைப் பேணும் நிறுவனங்களுடனான நகராட்சி மற்றும் மாநகராட்சி அரசுகளின் உறவுகளை மறுபரிசீலனை செய்யும்படியும் இத் தீர்மானம் கேட்டுக்கொண்டிருக்கிறது. ‘வால் மாட்’ போன்ற பெரும் அங்காடிகள் துப்பாக்கிகளையும், ரவைகளையும் சாதாரணமாகப் பொதுமக்களுக்கு விற்கின்றன. பல தடவைகள் துப்பாக்கிதாரிகள் ‘வால் மாட்’ அங்காடிகளில் அதன் வாடிக்கையாளர்களைச் சுட்டுக் கொன்றிருந்தும் அவ்வங்காடி துப்பாக்கி விற்பனையை நிறுத்தவில்லை. சமீபத்தில், ரவைகள் தொடர்பில் சில மாற்றங்களைக் கொண்டுவர முயறசிகளை ‘வால் மாட்’ மேற்கொள்கிறது என அறியப்படுகிறது.

பல கொன்செர்வேட்டிவ் அரசியல்வாதிகள் இத் தீர்மானத்துக்குப் பலத்த எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

Print Friendly, PDF & Email
>/center>