நான் எவரது பொம்மையாகவும் இருக்க மாட்டேன் - சஜித் -

நான் எவரது பொம்மையாகவும் இருக்க மாட்டேன் – சஜித்

பிரசாரக் கூட்டத்தில் முழக்கம்

செப்டம்பர் 25, 2019

“ஜனாதிபதி பதவி கிடைத்தால் நான் எவரது பொம்மையாகவும் இருக்கப் போவதில்லை” என சஜித் பிரேமதாச தெரிவித்தார். தனது வேட்பாளர் நியமனம் நிபந்தனைகளுடன் கொடுக்கப்பட்டது என ஊடகங்களில் தெரிவிக்கப்பட்ட செய்திகள் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதைத் தெரிவித்தார்.

“நிபந்தனைகளுக்கிணங்கவே நான் வேபாளராக்கப்பட்டேன் எனச் செய்தியொன்று வெளியாகியிருந்தது. நான் எவரது பொம்மையுமல்ல. சஜித் பிரேமதாச மட்டுமே நிபந்தனைகள் எதுவுமின்றி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுபவன். எனது மனச்சாட்சிக்குத் தகுந்தபடிதான் நான் வேலை செய்வேன்” என மடுகமவில் நடைபெற்ற பிரசாரக் கூட்டமொன்றில் பேசும்போது அவர் தெரிவித்தார்.

ஒரு நாட்டின் தேசியப் பாதுகாப்பு சமூகப்-பொருளாதார, அரசியற் கூறுகளைக் கொண்டது. தேசிய ஒற்றுமை இல்லாது பாதுகாப்பை உறுதிசெய்ய முடியாது. மக்களின் வழிபாட்டிடங்களை அழித்துக்கொண்டு தேசியப் பாதுகாப்பை முன்னெடுக்க முடியாது.

சஜித் பிரேமதாச

“பிரதமர் பதவியையோ அல்லது மந்திரிப் பதவிகளையோ எதிர்ப்பார்த்திருப்பவர்கள் சலுகைகளில் மட்டும் தொங்கிக்கொண்டிருக்காமல் கடுமையாக உழைக்கத் தயாராக இருக்க வேண்டும். சாதாரண மக்கள் துயருறும்போது ஆட்சியாளர்கள் வசதிகளை அனுபவிப்பது நியாயமற்றது. அலரி மாளிகை, யாழ்ப்பாணத்திலுள்ள ஜனாதிபதி மாளிகை போன்ற மாளிகைகளுள்ளிட்ட சகலதையும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கிலம் கற்பிக்கும் கலிவி நிலையங்களாக மாற்றுவேன்” என அவர் மேலும் தெரிவித்தார்.

தேசியப் பாதுகாப்பு பற்றிக் குறிப்பிடும்போது, “ஒரு நாட்டின் தேசியப் பாதுகாப்பு சமூகப்-பொருளாதார, அரசியற் கூறுகளைக் கொண்டது. தேசிய ஒற்றுமை இல்லாது பாதுகாப்பை உறுதிசெய்ய முடியாது. மக்களின் வழிபாட்டிடங்களை அழித்துக்கொண்டு தேசியப் பாதுகாப்பை முன்னெடுக்க முடியாது. புத்த மதத்தைப் பாதுகாத்து அதை ஒரு பெருமைதரும் காண்பொருளாக மாற்றுவதற்கு நான் உண்மையாக உழைப்பேன். பாலார் சமத்துவத்தைப் (gender equality) பேணுவதற்காக சட்ட மூலத்தை அறிமுகம் செய்வேன்” என சஜித் பிரேமதாச தன் பிரசாரக் கூட்டத்தில் பேசும்போது தெரிவித்தார்.

பெருமளவிலான பாராளுமன்ற உ றுப்பினர்கள் கூட்டத்தில் சமூகமளித்திருந்த போதிலும் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பாலித தேவாரப்பெருமா, ராஜித சேனாரத்ன, லக்ஸ்மன் விஜேமன்ன ஆகியோர் சமூகமளிக்கவில்லை என அறியப்படுகிறது.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
Related:  தன் குடும்பத்தினருக்காகப் பேரம் பேசிய முன்னாள் ஜனாதிபதி சிறிசேன!
error

Enjoy this blog? Please spread the word :)