நான் என் கணவர் சித்தார்த்துடன் பணி புரிய மாட்டேன் - வித்யா பாலன் -

நான் என் கணவர் சித்தார்த்துடன் பணி புரிய மாட்டேன் – வித்யா பாலன்

பாலிவூட் ஆகஸ்ட் 30, 2019

தன் கணவரும் தயாரிப்பாளருமான சித்தார்த் ரோய் கபூருடன் பணி புரிய மாட்டேன். தனது தொழில் வாழ்க்கையையும் தனிப்பட்ட வாழ்க்கையையும் பிரித்தே வைத்திருக்க விரும்புகிறேன் என நடிகை வித்யா பாலன் தெரிவித்திருக்கிறார்.

பத்திரிகையாளர் அனுபாமா சோப்றா வுடன் அவர் பேசும் போது, ” நான் எனது இயக்குனருடனும் தயாரிப்பாளருடனும் பிரச்சினைப் பட்டால் விவாதித்துக் கொள்ளலாம். உண்மையில் நான் சண்டை பிடிப்பதில்லை. நான் விவாதித்து ஒரு உடன்பாட்டுக்கு வருவேன். ஆனால் நான் சித்தார்த்துடன் அதைச் செய்ய முடியாது. தனிபட்ட பிரச்சினைகளில் நான் அவருடன் சண்டை பிடித்துக் கொள்ளலாம், பிடித்துக்கொண்டே இருப்பேன்” என்றார்

“எங்கள் உறவின்பாலுள்ள புனிதத்தைக் காப்பாற்றிக்கொள்ளவே விரும்புகிறேன். பல தடவைகளில் எனக்குப் பிடித்திருந்தும் நான் சில ‘ஸ்கிறிப்ட்டுகளை’ எடுக்கவில்லை. நான் அவருடன் பணம் பற்றிப் பேரம் பேச முடியாது” என்றார்.

வித்யா பாலன் நடித்து சமீபத்தில் வெளியான ‘மிசன் மன்கல்’ படம் ஒரு வெற்றிப் படமாகும். 200 கோடிகளை உள்ளூரிலும், வெளிநாடுகளிலும் பெற்றுக் கொடுத்திருந்தது அது. இந்தியாவின் செவ்வாய்க் கிரக விண்வெளி முயற்சிகளை வைத்து கற்பனை கலந்த படம்.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
Related:  திரை விமர்சனம் | சங்கத் தமிழன்
error

Enjoy this blog? Please spread the word :)