Spread the love

நவம்பர் 25, 2019.

'நாட்டை அபிவிருத்தி செய்ய இணைந்து பணியாற்ற வாருங்கள்' - புலம்பெயர் தமிழர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு! 1

சமூக வேற்றுமைகளை மறந்து நாட்டிலுள்ள அத்தனை மக்களினதும் முன்னேற்றத்துக்காகவும், நாட்டை அபிவிருத்தி செய்யவும் இணந்து பணியாற்ற வருமாறு புலம்பெயர்ந்த தமிழரிடம் கோரிக்கை வைத்திருக்கிறார் ஜனாதிபதி ராஜபக்ச.

பாரத் சக்தி.இன் மற்றும் எஸ்.என்.ஐ. செய்தி நிறுவனங்களின் முதன்மை ஆசிரியர் நிதின் ஏ.கோகலே விற்கு அளித்த பேட்டியின்போது அவர் அதைத் தெரிவித்தார்.

“புலம் பெயர் தமிழர்கள் எல்லாவற்றையும் மறந்துவிட்டு நாட்டினதும், மக்களினதும் நன்மைக்காக உழைக்க வேண்டும். நடந்தவற்றால் யாரும் பலன் பெறவில்லை. இலங்கையில் பிறந்தவர்கள் அனைவரும் இலங்கையர்களே. அவர்கள் எல்லோருக்கும் சம உரிமை உண்டு” என அவர் மேலும் தெர்வித்தார்.

சீன, இந்திய நாடுகளுடனான உறவைப்பற்றிக் கேட்டபோது ” இலங்கை எப்போதுமே நடிநிலையை வகிக்கும். சிறிலங்கா இந்துசமுத்திரத்தின் மிகவும் கேந்திர முகியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது. அதனால் எமது நாடு கடல் வாணிகத்தில் முக்கியத்துவம் பெறுகின்றது. அபிவிருத்தியடைந்துவரும் ஆசியாவின் எரிபொருள் தேவைகளை மத்தியகிழக்கும், கனிமத் தேவைகளை ஆபிரிக்காவும் தருகின்ற நிலையில் நாம் சர்வதேச வணிக நியமங்களை அனுசரித்துப் போகவேண்டும். எனவே நாம் இந்திய – சீன உறவு விடயத்தில் அணிசாராமல் இருக்கவே விரும்புகிறோம். பிராந்திய வல்லரசுகளிநதோ அல்லது உலக வல்லரசுகளினதோ போட்டிகளில் தலையிட்டு சமநிலையைப் பேணச் சிறிய நாடான எம்மால் முடியாது. அதனால் எந்தவொரு நாடும் பாதிப்புறுவதை நாம் விரும்பவில்லை.

இந்தியாவின் கவலை எமக்குப் புரிகின்றது. இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலைத் தரும் நாடாக நாம் ஒருபோதும் இருக்க மாட்டோம்.

உலகப்்பொருளாதாரத்தில் நாமும் இணந்துகொள்ள வேண்டும். இந்தியா, சிங்கப்பூர், மலேசியா,இந்தோனேசியா, சீனா, யப்பான் போன்ற நாடுகளிடமிருந்து அபிவிருத்தி உதவிகளை நாங்கள் பெறவேண்டியவர்களாகவிருக்கிறோம். இந்த நோக்கத்தில்தான் மஹிந்த ராஜபக்ச காலத்தில் அம்பாந்தோட்டை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட்டது. அதைச் சீனாவின் முத்துமாலையில் ஒரு அங்கமெனச் சொன்னார்கள். அது எங்கள் தேவைக்காக, எங்கள் கோரிக்கைக்கு இணங்கி உருவாக்கப்பட்டது. அதை சீனாவிடம் நாம் கொடுத்துவிடப் போவதில்லை. துரதிர்ஷ்டவசமாக முந்திய அரசு அதை 99 வருட குத்தகைக்குச் சீனாவுக்குக் கொடுத்துவிட்டது. அது பிழையான காரியம். நாம் அதை மீளவும் பேரம் பேசி நல்லதொரு ஒப்பந்தத்தை எழுத வேண்டும்

இந்தியா சீனாவில் முதலீடு செய்கிறது, சீனா இந்தியாவில் முதலீடு செய்கிறது. இலங்கையில் சீன முதலீடு இதர பிராந்திய நாடுகளை அச்சுறுத்துவதாக நினைக்கிறார்கள். அது உண்மையல்ல. இம் முதலீடு வர்த்தக ரீதியானது மட்டுமே. சீனாவை மட்டுமல்ல எமது பிராந்திய நாடுகள் எல்லாவற்றையும் இலங்கையில் முதலீடு செய்ய வரும்படி நான் அழைக்கிறேன்.

தேர்தலில் சிறுபான்மையினரின் வாக்குகள் உங்களுக்குக் கிடைக்கவில்லையாயினும் நீங்கள் சகலருக்குமான ஜனாதிபதி எனக் கூறியிருந்தீர்கள். சிறுபான்மையினருடனான நல்லிணக்கத்தை எப்படி முன்னெடுத்துப் போவதாக உள்ளீர்கள் எனப் பேட்டியாளர் கேட்டதற்கு ” அபிவிருத்தி ஒன்றே எனது பதில். கடந்த காலங்களில் சிங்கள தமிழ்த் தலைவர்கள் நடக்கமுடியாத ஒன்றை மக்களுக்குச் சொல்லி அவர்களை ஏமாற்றி வந்தார்கள். சகல மக்களும் இலங்கையர்களாக நல்வாழ்வை வாழ சந்தர்ப்பத்தை நாங்கள் வழங்க வேண்டும்.

Related:  ஈழவிடுதலைப் போராட்டம் | உபகதைகள்

போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை அபிவிருத்தி செய்து சகல மக்களும் சம உரிமைகளுடனும் வாழ வழிசெய்யப்படும். பலவருடங்களாகக் காடுகளில் இருந்து போர்செய்யப்பழகியவர்களுக்கு பொதுவான கல்வியுடன் தொழிற்கல்வியையும் புகட்டி சாதாரண வாழ்வில் இணைக்கவுள்ளோம். சிங்கள பெளத்த பெரும்பான்மை சமூகத்தைச் சந்தேகப்படுத்தும் வகையில் சிறுபான்மைச் சமூகங்கள் நடந்துகொள்ளாமல் இருந்தால் சரி. சமூகங்களிடையே பேதங்கள் இருக்கும் அதை நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றார் ஜனாதிபதி ராஜபக்ச.

ஆங்கிலதில் உள்ள பேட்டி முழுவதையும் பார்க்கப் பின்வரும் தொடுப்பை இணைக்கவும்: http://www.dailymirror.lk/top_story/Prez-invites-Tamil-diaspora-to-work-together-to-develop-country/155-178441

Print Friendly, PDF & Email