மோசமான நிலைமைக்குள் தள்ளப்பட்டிருக்கும் நாட்டைக் காப்பாற்ற புதிய தலைவரொருவரைத் தேடவேண்டும் என அபயராமா விகாராதிபதி முறெத்தெட்டுவ ஆனந்த தேரர் இன்று (17) ஊடகவியலாளருடன் பேசும்போது தெரிவித்துள்ளார்.
“இயல்பாகவும் எளிமையாகவும் பழகும், நாட்டை நேசிப்பதுடன் அதை முன்னெடுத்துச் செல்லவல்ல ஒருவரே எமக்குத் தேவை. மக்கள் வாடும்போது தனக்குத் தீனி போடும் தலைவர் எமக்குத் தேவையில்லை. தலைவர் என்பவர், நாட்டின் சொத்துக்களை விற்பவராக இருக்கக்கூடாது” என தேரர் தெரிவித்தார்.
“நாட்டை முன்னெடுத்துச் செல்ல் வல்ல தலைவர் ஒருவரைத் தேடும் முயற்சி ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது” என அவர் மேலும் தெரிவித்தார்.