Obituary

நாடகர் சாந்திநாதன் மறைவு

சிறந்த நாடகரும், சமூக செயற்பாட்டாளருமாகிய நா.சாந்திநாதன் அவர்கள் ஜூன் 10 அன்று கனடாவில் காலமானார்.

கடந்த 50 ஆண்டுகளாக இலங்கை, கனடா ஆகிய நாடுகளில் நாடகக்கலை, இலக்கிய ஈடுபாடுகளில் வெகுவாகப் பங்களித்துவந்த சாந்தி என அழைக்கப்படும் நாகமுத்து சாந்திநாதன் அவர்கள் சுகவீனம் காரணமாக மரணமாகியுள்ளார்.

நடிகராகவும், நெறியாளராகவும் பாராட்டப்பட்ட பல நாடகங்களில் அவரது கைவண்ணம் மிளிர்ந்தது. லண்டன் அவைக்காற்றுக் கலைக்கழகம், கனடா மனவெளி அமைப்பின் அரங்காடல், நாளை நாடகப்பட்டறை எனப் பல அமைப்புகளுடனும் இணைந்து அவர் பல வழிகளிலும் தன் பங்களிப்பை வழங்கி வந்தவர்.

அதிகம் பேசாத எப்போதும் சிரித்த முகத்துடன் உலாவரும் சாந்தியின் இழப்பு தமிழ் நாடக உலகுக்குப் பேரிழப்பு. அவர் விட்டுப்போன பணியைத் தொடர்வதே அவரது ஆன்மாவின் அமைதிக்கு நாம் செய்யும் கைமாறாகும்.

அவர்து இழப்பால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது அஞ்சலி!