EntertainmentIndiaNews

நாசர் நடிகர் சங்கத் தலைவராகத் தெரிவு!

மூன்று வருட இழுபறிக்குப் பிறகு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

2019 இல் நடைபெற்று சட்டத் தகராறுகளால் இழுபறியிலிருந்த தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல்களின் முடிவுகள் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் பிரகாரம் நடிகர் மர்றும் நடிகர் விஷால் தலைமையிலான ‘பாண்டவர் அணி’ நடிகர் பாக்கியராஜ் தலிமையிலான ‘சுவாமி சங்கரதாஸ் அணி’ யைத் தோற்கடித்திருக்கிறது.

இத் தேர்தல் முடிவுகளின்படி நடிகர் நாசர் 1,701 வாக்குகளைப் பெற்று நடிகர் சங்கத்தின் தலைவராகவும், 1,720 வாக்குகளைப் பெற்று நடிகர் விஷால் சங்கத்தின் செயலாளராகவும் வெற்றியீட்டியிருக்கிறார்கள். சங்கத்தின் தனாதிகாரி பதவிக்குப் போட்டியிட்ட நடிகர் கார்த்தி 1,827 வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியுள்ளார். இரு உப தலைவர் பதவிகளும், தலா 1,605, மற்றும் 1,612 வாக்கு எண்ணிக்கைகளைப் பெற்ற ‘பாண்டவர் அணி’ நடிகர்கள் கருணாஸ் மற்றும் புச்சி முருகனுக்குப் போகின்றன.

இதை விடவும் சங்கத்தின் 24 பேர் கொண்ட நிறைவேற்றுக் குழுவின் பதவிகளையும் ‘பாண்டவர் அணி’யே தட்டிச் செல்கிறது. குஷ்பு, கோவை சரளா, ராஜேஷ், மனோபாலா, அஜே ரத்தினம், பசுபதி, ஜூனியர் பாலையா, சிபிராஜ், நந்தா மற்றும் ரமணா ஆகியோரும் இந்த நிறைவேற்றுக்குழுவில் வெற்றிபெற்றவர்களாகிறார்கள்.

2019 இல் நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தல்களின்போது விஷால், நாசர், கார்த்தி போன்றோரே சங்கத்தின் முக்கிய பதவிகளில் இருந்தார்கள். பின்னர் ஜூன் 2021 இல் தேர்தல்கள் நடிபெற்றபோது சங்கத்தின் 3,171 வாக்குகளில் 1,604 மட்டுமே பதிவாகியிருந்ததால் அவ் வாக்குகள் உத்தியோகபூர்வமாக என்ணப்படவில்லை. சில அங்கத்தவர்கள் தமது பெயர்கள் வேட்பாளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருந்ததாக நீதிமன்றத்தில் முறையிட்டிருந்ததன் காரணமாக இத் தேர்தல்களை இடைநிறுத்துமாறு பதிவாளர் திணைக்களம் ஆணையிட்டிருந்தது. இதை எதிர்த்து நடிகர் விஷால் தலைமையிலான அணி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளிவந்துள்ளது. அதன்படி ஜூன் 21, 2019 இல் நடைபெற்ற தேர்தல்கள் செல்லுபடியாகுமென நீதிமன்றம் அறிவித்துள்ளது. நான்கு வாரங்களுக்குள் இம் முடிவுகள் அறிவிக்கப்படவேண்டுமெனவும் நீதிமன்றம் பணித்துள்ளது. (தி நியூஸ் மினிட்)