• Post category:SRILANKA
  • Post published:November 10, 2020
Spread the love

ஒதுக்கப்பட்ட ஜீவன் தொண்டமான்?

நவம்பர் 6, வெள்ளியன்று யாழ் அரசாங்க சேவகரும் மாவட்ட செயலாளருமான திரு கே. மகேசன் தன் எசமானரின் கோவிட் கட்டளையை அறிவிக்கிறார்: இறப்பு வீட்டுக்கு 25 பேர்; திருமணத்துக்கு 50 பேர்; கோவில் பூசையை பூசாரி மட்டுமே செய்ய வேண்டும்; சாப்பாட்டுக் கடைகளில் உணவு விநியோகம் மட்டுமே செய்ய முடியும்; முகக் கோவணங்கள் எப்போதும் அணியப்பட வேண்டும்; கைகள் கழுவப்பட வேண்டும்; தேவையற்ற சடங்குகள், சந்திப்புகள் நிறுத்தப்ப்ட வேண்டும்.

இந்நடைமுறைகள் அவசியமென்பதில் இரண்டாவது கருத்தில்லை. இவற்றினால் நூற்றுக்கணக்கான சமையைல் தொழிலாலர்கள், சேவகர்கள் இதர பணியாளர்கள் வேலையிழந்தும் அவர்களின் குடும்பங்கள் பட்டினி கிடந்தும் அரச கட்டளைகளைச் சிரமேற்கொண்டு அடங்கியும் ஒடுங்கியும் வாழ்கிறார்கள்.

அம்பலமாகிய யாழ். அரச சேவகர் மகேசனின் கோவிட் நாடகம் 1
படங்கள்: கதிரவன் / Colombo Telegraph


ஆனால் இக் கட்டளைகளைப் பிறப்பித்த அரச சேவகரோ மேற்கத்தய ரக உணவு மாளிகைகளில் தனது சகாக்களுக்கு அரசாங்கச் செலவில் விருந்து பரிமாறுவதும், அங்கு பெருந்திரளாகத் திரண்டு வந்திருந்த பிரமுகர்கள் கோவிட் கட்டளைகளை அனுசரிக்காது நடந்துகொள்வதும் எவ்வகையில் நியாயமாகும்?

வியாழன் இரவு 7 மணி போல், ஓய்வு பெறும் தனது பணியாளர் ஒருவருக்கு வலம்புரி ஓட்டலில் மகேசன் ஒரு விருந்துபசாரம் வைத்தார். இதற்கு 50 பிரமுகர்கள் ழைக்கப்பட்டிருந்தார்கள். மகேசன் உட்படப் பலர் முகக் கவசங்களை அணிந்திருக்கவில்லை. மண்டபத்தின் பின் பக்கத்தில், வழக்கம் போல உணவைப் பெற்றுக்கொள்வதற்கு மகாஜனங்கள் முண்டியடித்துக்கொண்டு நெருக்கமாக உறவைப் பேணுவது தெரிகிறது. சில அரசியல்வாதிகள் தம்மை முன்னுதாரணமாகக் காட்டிக்கொள்வது பெருமையாகவிருக்கிறது.

யாழ்ப்பாணக் கச்சேரியில் நிலைமை வேறு. அங்கு 200 பேருக்கு மேல் சந்தித்த இன்னுமொரு கூட்டத்தை மகேசன் ஒழுங்கு செய்திருந்தார். அதில் கொழும்பிலிருந்து வந்த அமைச்சர்கள், அவர்கள்து ஊடகப் பிரிவு ஆகியோரும் அடங்குவர். மருத்துவ அதிகாரி இந்நிகழ்வுக்கு எதிராக எழுத்தில் விண்ணப்பித்திருந்தார். மண்டபத்தின் அளவு போதாது என்றும் இது பெரும் ஆபத்தில் முடியுமென்றும் அவர் எச்சரித்திருந்தார். சுகாதார அமைச்சுக்கும் அவரது எதிர்ப்பு அறிவிக்கப்பட்டது. இருப்பினும் மக்கள் மகேசனுக்கு உபதேசம் செய்யமுடியாது தானே. யாழ் மருத்துவத்துறை ஒதுங்கி இடம் விட்டது. கூட்டம் நடைபெற்றது.மூன்று மணித்தியாலங்கள் நடைபெற்ற இக் கூட்டத்தில் மகேசனின் உபதேசம் எதுவும் பின்பற்றப்படவில்லை. இதில் முக்கிய விடயமாகக் கவனிக்கப்படவேண்டியது இன்னுமொரு வகையான சமூகத் தனிமைப்படுத்தல். இதற்கும் கோவிட்டுக்கும் சம்பந்தமில்லை.

இக்கூட்டத்தில் அரச பிரமுகர்களுக்கு முன்வரிசை ஆசனங்களில் இடம் கொடுக்கப்படவேண்டுமென்பது நடைமுறை. மகேசன், கிளிநொச்சி அரசாங்க சேவகர், ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் அவர்களுக்கு வேண்டப்பட்டவர்கள், பந்தம் பிடிப்பவர்கள், ஊடகக்காரர் முன் வரிசைகளில் அமர்த்தப்பட்டார்கள். மலைநாட்டுத் தமிழரும், கிராம அபிவிருத்தி ராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கு பின் வரிசையில் இடம் வழங்கப்பட்டது. பாளுமன்ற விவகாரங்களைச் செய்தியாக்கிய பலர் இந்த ஊடகக்குழுவில் இருந்தார்கள் என்பதும் அவர்களில் பலருக்கு கோவிட் தொற்று இருக்கிற்து என்பது உறுதி செய்யப்பட்டதும் முன்பே செய்திகாகியிருந்தன. கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட பாராளுமன்றத்தில் கலந்துகொண்ட தமிழ் உறுப்பினர்கள் பலரும் இக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார்கள்.

அன்றைய நாளின் முத்தாய்ப்பாக, இக் கூட்டத்தில் கலந்துகொண்ட 60 பேருக்கு யாழ்ப்பாணத்தின் மேட்டுக்குடி உணவகத்தில் (ஒரு அமெரிக்க ஓட்டல்) மகேசன் ஒரு விருந்து வைத்தார். விலை? தலைக்கு 1600.

இக்கூட்டத்தில், கொழும்புத் தொற்றாளர்களுடன் இக் கூட்டத்தில் உறவாடியமைக்காக, கோப்பாய் பிரதேச செயலாளரைச் சுய தனிமைப்படுத்தல் செய்யுமாறு கோப்பாய் மருத்துவ அதிகாரி உத்தரவிட்டார். இருப்பினும் அவரது கட்டளையை அத்துமீறி பிரதேச செயலாளரை விடுவித்து மீண்டும் சமூக ஒன்றுகூடலில் கலந்துகொள்ளும்படி மகேசன் உத்தரவிட்டார். இதுபற்றி விசாரித்தபோது “அது கொழும்பின் கட்டளை” என மகேசன் கூறியதாகத் தெரியவருகிறது.

மூலம்: பி.ஏ.கதிரவன் / கொலொம்பொ ரெலிகிராஃப்

-மாயமான்

Print Friendly, PDF & Email