நவம்பர் 16 இல் இலங்கை ஜனாதிபதி தேர்தல்! -

நவம்பர் 16 இல் இலங்கை ஜனாதிபதி தேர்தல்!

Spread the love
அக்டோபர் 7 இல் நியமனங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்

ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 16 அன்று நடைபெறுமென வர்த்தமானி மூலம் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தற்போதய ஜனாதிபதியின் பதவிக் காலம் ஜனவரி 7, 2020 இல் முடிகிறது. அரசியல் சாசனத்தின் 31வது கட்டளையின் 3 வது பிரிவின்படி, இத் திகதியிலிருந்து ஒரு மாதத்துக்குக் குறையாமலும் இரண்டு மாதங்களுக்கு மேற்படாமலும் இருக்கும் காலத்துக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

இது வரையில் 17 பேர்கள் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பாக கோதபாய ராஜபக்சவும், ஜே.வி.பி. தலைமையிலான கூட்டணி சார்பில் அனுரகுமார திசநாயக்காவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஐ.தே.கட்சி தலைமையிலான கூட்டணி இன்னும் சில நாட்களில் தனது வேட்பாளரை அறிவிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

1982 இல் நடைபெற்ற முதலாவது ஜனாதிபதி தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் 8 வது தேர்தல் இதுவாகும். 19 வது யாப்புத் திருத்தம் நிறைவேற்று ஜனாதிபதியின் பல அதிகாரங்களைப் பறித்துக்கொண்டது மட்டுமல்லாது 6 வருடங்கள் என இருந்த ஜனாதிபதி பதவிக் காலத்தை 5 வருடங்களாகக் குறைத்தும் விட்டது.

ராஜகிரியவில், சாரண மாவத்தயில் அமைந்துள்ள தேர்தல் ஆணையத்தின் செயலகத்தில் வேட்பாளர் நியமனப் பத்திரங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
Related:  ஐ.தே.கட்சியை உடைப்பதில் ராஜபக்சக்கள் வெற்றி?