News & AnalysisSri Lanka

நல்லூர் கிட்டு நினைவுப் பூங்காவிற்குத் தீவைப்பு

நல்லூரில் இருக்கும் கிட்டு நினைவுப் பூங்காவின் நுழை வாயில் ஞாயிறன்று இனந்தெரியாதவர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதென அறியப்படுகிறது.

இச் சம்பவம் பற்றி யாழ் மாநகரசபையின் தீயணைப்புப் படையினருக்கு அறிவிக்கப்பட்ட போதிலும் அது மற்றுமொரு தீச் சம்பவ இடந்த்திற்குச் சென்றுவிட்டதாகக் கூறப்பட்டிருந்தது.

நிணைவுப் பூங்காவின் நுழைவாயில் தீயினால் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.

விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களில் ஒருவரான மறைந்த கேணல் கிட்டுவின் ஞாபகமாக 1994 இல் இப் பூங்கா நிறுவப்பட்டிருந்தது. இறந்த போராளிகளின் பெயரில் மரம் நடுகை உடபட்ட பல சமூக நிகழ்வுகள் இந் நினைவு மண்டபத்தில் நடைபெறுவது வழக்கம்.

1993 இல், கேணல் கிட்டுவும் 9 போராளிகளும், இலங்கை நோக்கிக் கப்பலில் வந்துகொண்டிருந்தபோது இந்திய கடற்படைக் கப்பல்களினால் சூழப்பட்டபோது தற்கொலை செய்துகொண்டார்கள்.

2005 இல் கேணல் கிட்டு நினைவுகூரப்பட்ட போது