Sri Lanka

நல்லிணக்கத்திணுடாக அபிவிருத்தியை அடைவதே அரசாங்கத்தின் நோக்கம் – ஜனாதிபதி

இலங்கை சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் நேற்று (பெப் 28) அன்று ‘நல்லிணக்கத்துக்கான மதங்கள்’ என்ற தலைப்பில் கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் மாநாடு ஒன்று நடைபெற்றது.

17 மாவட்டங்களை உள்ளடக்கி, கடந்த மூன்று ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்ட “மோதல்களைத் தவிர்ப்பதற்கான பன்முக நடவடிக்கைகள்” என்ற திட்டத்தின் நிறைவையொட்டி இச்சர்வமத மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இமாநாட்டில் பேசிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ” இனவாதம் மற்றும் மதவாதத்தை ஒதுக்கிய உலகின் அனைத்து நாடுகளும் விரைவான அபிவிருத்தியை அடைந்துள்ளன. நல்லிணக்கத்தினூடாக அபிவிருத்தியை அடைவதே அரசாங்கத்தின் நோக்கம்” எனத் தெரிவித்தார்.

இனவாதமும் மதவாதமும் அரசியல்வாதிகளுக்கு அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கும் மதத் தலைவர்கள் தமது பதவிகளில் நீடிப்பதற்கும் குறுகிய வழியாக மாறியுள்ளதைச் சுட்டிக்கட்டிய ஜனாதிபதி, நீண்டகால கசப்பான அனுபவமானது நாட்டைப் பயங்கரமான போருக்கு இழுத்துச் சென்றதையும் நினைவுகூர்ந்தார்.

எனவே நாட்டில் இன நல்லிணக்கத்தையும் மத நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்திய ஜனாதிபதி அதற்காக அரசாங்கம் பல சாதகமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் சுட்டிக் காட்டினார்.

இதுகுறித்து ஜனாதிபதி ஊடகப் பேரவையினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையைக் கீழே பார்க்கலாம்.