நறுக்குப் பக்கம்

வெட்டியான்

நினைவு

28 மே 2022

*****

கோ.பி. (கோவிட்டுக்குப் பின்னான) இளவேனில் பொழுதொன்றில் செல்வத்தாரின் புத்தகக்டைக்குப் போகச் சந்தர்ப்பம் கிடைத்தது. பக்கத்து அறையில் ‘இளங்கோவின் மூன்று நூல்கள்’ சங்கப் பலகையில் சவாரி செய்வதற்குத் தயாராகியிருந்தன. சற்றே காலாறிக், கையாறி, வாயாறி வரச் சந்தர்ப்பம் கைகூடியது. மூன்று புத்தகங்களுடன் வீடு வந்தேன். அலுமாரியில் செல்வத்தாரின் கடை அப்படியே தெரிகிறது. இவை எல்லாவற்றையும் வாசித்து முடிக்க இன்னும் இரண்டு பிறவிகள் வேண்டும்.

ஃபோனை நோண்டும்போது காரணமில்லாமல் ஒரு படம் மின்னிப் போனது. ஜனவரி 2016 இல் நண்பர் முரளியின் மகளின் திருமணமன்று எடுத்தது. நான், பாபு, செழியன், சக்கரவர்த்தி, வை.கே., முரளி நிற்கும் படம். பாபுவும் செழியனும் அலுவலாக மேலே சென்றுவிட்டார்கள். உடம்பு சிலிர்த்தது.

அஃதே…அஃதே.

****