நத்தார் வாழ்த்துக்கள்!

தலையங்கம்

நாளை நத்தார் தினம். மனித ஈடேற்றத்துக்காய் பிறந்த ஒரு மனிதரின் பிறப்பைக் கொண்டாடும் நாள். இத் தினத்தைக் கொண்டாடுவதும் புறக்கணிப்பதும் அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. அவரின் பிறப்பை, வாழ்க்கையை அர்ப்பணிப்பை நம்புபவர்கள் அவரைப் பின்பற்றி நல்லவர்களாய் வாழ்வதால் உலகத்துக்கு நன்மை பயக்குமாயின் அவரைக் கொண்டாடுததில் தவறில்லை. அதற்கு இன, மத மொழி சார்ந்த முத்திரைகள் எதுவும் அவசியமில்லை.

அவரைப் போல் வாழ முயற்சிப்பதே அவருக்கு இன்று நாம் செய்யக்கூடிய கைங்கரியமாகும்.

இந்நாள் எல்லோருக்கும் அமைதியயும் சமாதானத்தையும் பெற்றுத்தரும் நாளாக இருக்கவேண்டுமென்பதே எமது விருப்பம்.

வாழ்த்துக்கள்!

ஆசிரியர்

மறுமொழி