நடிகை கங்கனா ரனோவுக்கு கோவிட் தொற்று!

தன்னை அடிக்கடி பிரச்சினைக்குள் மாட்டிக் கொள்வதில் வல்லவரான நடிகை கங்கனா ரனோவுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக அவரது ‘இன்ஸ்டாகிராம்’ மூலம் தெரிவித்திருக்கிறார்.

ருவிட்டர் மூலம் அடிக்கடி அரசியல், சமூகம் சம்பந்தப்பட்ட பதிவுகளைச் செய்துவந்த அவரது கணக்கைச் சமீபத்தில் ருவிட்டர் மூடியிருந்தது. வன்முறையைத் தூண்டும் விதத்திலும், மற்றவர்களைப் புண்படுத்தும் வகையிலும் அவர் செய்திகளை வெளியிட்டு வந்ததையடுத்து ருவிட்டர் அவரை எச்சரித்திருந்தது. ஆனாலும் அவர் அதை உதாசீனம் செய்ததுமல்லாது தொடர்ந்தும் வன்முறையைத் தூண்டும் விதத்தில் செய்தியைப் பகிர்ந்ததற்காக ருவிட்டர் அவரது கணக்கை நிரந்தரமாக மூடியிருந்தது.

இன்று (சனி) அவர் தனது இன்ஸ்டகிராம் கணக்கின் மூலம் தனக்கு கோவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

கங்க ரனோ

“எனக்கு கொஞ்சம் களைப்பும் பலவீனமுமாக இருந்தது; கடந்த சில நாட்களாகக் கண்களில் சாதுவாக எரியும் உணர்வு இருந்தது. இருப்பினும் இமாலயப் பிரதேசத்திற்குப் போவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தேன்; அதற்கு முன் கோவிட் பரிசோதனையைச் செய்தேன். எனக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இன்று அறிவித்தல் வந்திருக்கிறது” எனக்கூறி அவர் யோகான நிலையில் இருக்கும் தனது படமொன்றையும் அச்செய்தியுடன் இணைத்துள்ளார்.

“நான் என்னைத் தனிமைப்படுத்தியுள்ளேன். வைரஸ் எனது உடலில் கும்மாளமடிப்பது பற்றி எனக்குத் தெரியாது. இப்போது எனக்குத் தெரிந்துவிட்ட படியால், நான அதனை அழைத்து விடுவேன். மக்களே உங்களுக்கு மேல் அதிகாரம் செலுத்துவதற்கு எதற்கும் எவருக்கும் அனுமதியளிக்காதீர்கள். நீங்கள் பயன்ந்து போனீர்காளானால் அது உங்களை மேலும் பயப்படுத்தும். கோவிட்டை அழிப்பதற்கு என்னோடு இணைந்துகொள்ளுங்கள். அது ஒரு சிறிய காய்ச்சல் வைரஸ் மட்டுமே. ஊடகங்கள அதற்கு அதிகம் கெளரவம் கொடுப்பதனால்தான் அது மக்களை மனோவியல் ரீதியில் வருத்துகிறது. அரகர மஹா தேவா” என அவரது பதிவு இருந்தது.

பொதுவிடங்களில் முகக்கவசம் அணிவதற்குத் தொடர்ந்து மறுப்புத் தெரிவித்து வருபவர் கங்கனா. அவரது நடவடிக்கைகளைப் பல பொலிவூட் நடிகர்களும் நடிகைகளும் பகிரங்கமாக விமர்சித்து வருகின்றனர். ஆனாலும் எவரது விமர்சனங்களையும் அவர் சட்டை செய்யாது தனது அபிப்பிராயங்களைப் பகிரங்கமாகத் தெரிவித்து வருகிறார்.

விவசாயிகள் போராட்டம் தொடர்பாக அவர் விவசாயிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருந்தார். சமீபத்தில் கோவிட் நோயாளிகளுக்காக உயிர்வாயு சிலிண்டர்களில் அடைப்பது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த குறுஞ் செய்தி மிகவும் பரபரப்பைக் கிளப்பியிருந்தது. ” மனிதர்கள் இறந்துபோனால் பூமி தழைக்கும். இயற்கையிலிருந்து உறிஞ்சும் இந்த உயிர்வாயுவை யார் ஈடுசெய்யப் போகிறார்கள்?” என அவர் கேட்டிருந்தார்.