நடிகையர் திலகம் | சாவித்திரியின் கதை -

நடிகையர் திலகம் | சாவித்திரியின் கதை

தமிழ்த் திரையுலகின் பால் வெளியில் என்றும் மறையாத தாரகைகளாக ஒஸிர்ந்து கொண்டிருப்பவர்களில் நடிகை சாவித்திரியும் ஒருவர். ஜெமினி கணேசனுக்கு இரண்டாவது மனைவியாக வாழ்க்கைப்பட்டு உச்சத்தைத் தொட்டுப் பின்னர் உருத்தெரியாமலேயே இறந்து போன அவரது வாழ்க்கையை ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் படமாக்கியிருந்தார்கள். அப்படம் பற்றிய பின்னணி, தயாரிப்பு பற்றி அவரது மகள் விஜய சாமுண்டேஸ்வரியும் அவரை நன்கு தெரிந்திருந்த நடிகர் ராஜேஷ் அவர்களும் இண்டியா கிளிட்ஸ் இற்கு வழங்கிய பேட்டிகளின் காணொளிகளும், ஜெமினி கணேசனின் முதல் மனைவியின் மகள் டாக்டர் கமலா செல்வராஜ் அவர்கள் பிஹைண்ட் வூட்ஸ் இணையத்தளத்திற்கு வழங்கிய பேட்டியின் காணொளியும் இங்கே தரப்படுகின்றன.

தெலுங்கில் நாக் அஸ்வினின் இயக்கத்தில் ‘மகானதி’ என்ற பெயரிலும் தமிழில் ‘ நடிகையர் திலகம்’ என்ற பெயரிலும் தயாரிக்கப்பட்ட இப் படம் சாவித்திரியின் தெலுங்கு பூர்விகத்தையும் அவர் மீதான சார்பு நிலையையும் எடுத்திருக்கிறது என்ற விமர்சனமும் இருக்கிறது. ஜெமினி கணேசன் ஒரு தமிழர் என்பதாலும், தெலுங்கு ரசிகர்களிடையே அதிகம் அறியப்படாதவர் என்பதாலும் தயாரிப்பாளர் சார்பு நிலையை எடுத்திருக்கலாம். இருப்பினும் இதில் நடித்த கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான், சமந்தா, விஜய் தேவரகொண்டா ஆகியோர் திறமையாக நடித்துள்ளனர் எனவும் பரவலாக அறியப்படுகிறது. சாவித்திரி தன் இறுதிக்காலங்களில் மதுவுக்கு அடிமையாகி இருந்ததாகவும், திரைபடத் தயாரிப்பில் இறங்கியதால் பண முடைக்குள்ளாகியதாகவும் இறுதியில் நினைவிழந்த நிலையில் (கோமா) 19 மாதங்கள் இருந்து உயிரிழந்தார் எனவும் அவரது இந்த நிலைக்கு அவரா அல்லது ஜெமினி கணேசனா காரணம் என்பது பெரும் விவாதத்துக்குள்ளாகியிருந்தது எனவும் இப்பின்னணியில் தான் ‘நடிகையர் திலகம்’ படம் எடுக்கப்பட்டது எனவும் பல தகவல்கள் வெளியாகியிருந்தன.

இக்காரணங்களினால் இரு தரப்பினரதும் அதே வேளை நடிகர் ராஜேஷ் போன்ற மூன்றாம் தரப்பின் பார்வைகளையும் கொண்ட காணொளிகள் இங்கே இணைக்கப்பட்டுள்ளன.

காணொளீ நன்றி: இண்டியாகிளிட்ஸ், பிஹைண்ட் வூட்ஸ்

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
Related:  2021 தமிழ்நாடு சட்ட சபைத் தேர்தல் | கமல்-ரஜனி இணைந்து போட்டி?
error

Enjoy this blog? Please spread the word :)