நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவ மனையில் அனுமதி

இருதய வலி காரணமாக, நடிகர் விவேக் இன்று (ஏப்ரல் 16, வெள்ளிக் கிழமை) சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாரடைப்பு ஏற்பட்டதன் விளைவாக அவர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும் தற்போது அஞ்சியோகிராம் செய்வதற்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளார் எனவும் அறியப்படுகிறது.

59 வயதாகும் நடிகர் விவேக், நேற்று, வியாழனன்று கோவிட் தடுப்பூசியை எட்டுத்திருந்தார். தடுப்பூசி எடுத்த கையோடு அவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், தடுப்பூசியை எடுப்பதற்குத் தகுதியுடையவர்கள் அனைவரும் அதை எடுக்கும்படி கேட்டிருந்தார்.

“கொறோணாவைரஸிலிருந்து நாம் எம்மைப் பாதுகாக்க நாம் முகக் கவசங்களை அணிவதும், கைகளைக் கழுவுவதும், போதுமான சமூக இடைவெளிகளைப் பேணுவதும் அவசியம். மருத்துவ முறையில் நாம் எம்மைப் பாதுகாக்க தடுப்பூசியைப் போட வேண்டும். நீங்கள் சிதத மருந்துகளையோ, ஆயுர்வேத மருந்துகளையோ, வைட்டமின் C, துத்தநாக மாத்திரைகளையோ எடுக்கலாம். அவையெல்லாம் மேலதிக தடுப்பு முறைகள். தடுப்பூசி ஒன்றே உங்கள் உயிரைப் பாதுகாக்கும். தடுப்பூசிகளை எடுத்தவர்களுக்கு கோவிட் தொற்று வருவதில்லையா என நீங்கள் கேட்கலாம். கோவிட் -19 தொற்றினாலும், தடுப்பு மருந்து எடுத்தவர்கள் சாகப் போவதில்லை” என நடிகர் விவேக் ஊடகங்கள் மூலம் மக்களைக் கோரியிருந்தார்.

விசேட மருத்துவர் குழுவொன்று மருத்துவமனையில் அவரருகே இருந்து நிலைமைகளை அவதானித்து வருகிறது எனக் கூறப்படுகிறது