நடிகர் விஜயகாந்திற்கு கொறோணாவைரஸ் தொற்று – மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

நடிகர் விஜயகாந்திற்கு கொறோணாவைரஸ் தொற்று – மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

Spread the love

தேசிய முற்போக்குத் திராவிட கழகத் தலைவர், நடிகர் விஜயகாந்த் கொறோணாவைரஸ் தொற்றுக்குள்ளாகி, சென்னை மணப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் ஏற்கெனவே ஈரல், சிறுநீரக வியாதிகளால் பாதிக்கப்படு சிகிச்சை பெற்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது உடல்நிலை பயப்படுமளவுக்குப் பாதிப்பான நிலையில் இல்லை எனவும், விரைவில் அவர் குணமாகிவிடுவார் எனவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

கட்சியின் 16 வது வருடாந்த பூர்த்தி விழாவை, செப்டம்பர் 14 அன்று கோயம்பேடு கட்சி அலுவலகத்தில் கொண்டாடியபோது அவருக்குத் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

கொறோணாவைரஸ் தொற்று பரவுவதற்கு முன்னரே நடிகர் விஜயகாந்த், உடல்நிலை காரணமாக, பகிரங்க நிகழ்வுகளில் பங்குபற்றுவதைத் தவிர்த்து வந்தார். ‘கப்டன்’ விஜயகாந்தாக அவர் மீண்டுவரவேண்டுமென்று,வழிபாடுகளுடன், ஆகஸ்ட் 25 அன்று அவரது பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாடியிருந்தார்கள்.

Print Friendly, PDF & Email