நடிகர் வடிவேலுவுக்கு கொறோணா தொற்று – மருத்துவமனையில் அனுமதி

கொறோணா தொற்றினால் பீடிக்கப்பட்டு, நகைச்சுவை நடிகர் வடிவேலு இன்று (டிசம்ப்ர் 24) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள்ளார்.

சில நிகழ்வுகளில் பங்குபற்றிவிட்டு அவர் லண்டனிலிருந்து நேற்று (வியாழன் 23) நாடு திரும்பியிருந்தார் எனவும் சென்னை விமான நிலையத்தில் பரிசோதிக்கப்பட்டபோது அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது எனவும் அறியப்படுகிறது. அவரது உடல்நிலை திருப்திகரமாக இருக்கிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.



லைக்கா நிறுவனம் தயாரிக்கும் ‘நாய் சேகர் றிற்றேர்ண்ஸ்’ (Naai Sekar Returns) படத்தின் இசையமைப்பு தொடர்பாக நடிகர் வடிவேலு., இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இயக்குனர் சுராஜ், லைக்கா முதன்மை நிர்வாகி தமிழ்க் குமரன் ஆகியோர் லண்டன் நகரில் சந்தித்திருந்தனர். நீண்டகால அஞ்ஞாதவாசத்திற்குப் பிறகு நடிகர் வடிவேலு நடிக்கும் முதல் படமாகையால் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை உருவாக்க்கியிருக்கிறது.

2011 சட்டமன்றத் தேர்தல்களின்போது தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாகத் தேர்தல் பிரசார மேடைகளில் பேசும்போது நடிகர் வடிவேலு தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தைப் பற்றி விமர்சித்துப் பேசியதைத் தொடர்ந்து அவர்மீது தொடுக்கப்பட்ட பலவித தாக்குதல்களினால் அவர் நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்தார்.