Spread the love

செப்டம்பர் 14, 2020: நீட் பரீட்சைகள் தொடர்பாக நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துக்கள் நீதிமன்றத்தை அவமதிக்கிறது எனக்கூறி, அவர் மீது அவதூறு வழக்குப் பதியும்படி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் தலைமை நீதிபதி ஏபி சாஹிக்குக் கடிதம் எழுதியிருந்தார். நீட் தொடர்பான மாணவர் தற்கொலைகள் மக்கள் மத்தியில் எழுப்பியிருக்கும் உணர்வலைகளையும், நடிகர் சூர்யா, தனது அறக்கட்டளை மூலம் சமூகத்துக்கு ஆற்றிவரும் தொண்டினையும் கருத்தில் கொண்டு, அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டாம் என ஓய்வு பெற்ற ஆறு நீதிபதிகள் முதன்மை நீதிபதிக்குக் கடிதம் எழுதியுள்ளார்கள்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதிகளான, கே.சந்துரு, கே.என்.பாஷா, சுதந்திரம், டி. ஹரிபரந்தாமன், கே.கண்ணன், ஜி.எம். அக்பர் அலி ஆகியோரே இந்த ஆறுபேருமாவர்.

“கொறோணாவைரஸ் உயிராபத்தை விளைவிக்கலாம் என்ற அச்சத்தில் வீடியோ இணைப்பு மூலம், மாணவர்கள் மட்டும் அச்சத்தைத் துறந்து, நேரடியாகச் சமூகம் தந்து பரீட்சை எழுதுமாறு நீதிமன்றங்கள் பணிக்கின்றன” என நடிகர் சூர்யா நீதிமன்றத் தீர்ப்பு குறித்து கருத்துத் தெரிவித்திருந்தார்,

இக்கருத்து நீதித் துறைமீது மக்களின் நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்குவதுடன் நீதிபதிகளையும் விமர்சிக்கிறது எனக்கூறி, நீதிமன்றத்தை அவமதித்ததற்காக, நடிகர் சூர்யா மீது வழக்குப் பதியும்படி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதியிருந்தார்.



“நீதிபதி சுப்ரமணியத்தின் கடிதம், கொஞ்சம் நோக்கத்தை மீறியதாக இருக்கிறது. மாணவர் தற்கொலைகள் தொடர்பாக, மக்கள் மத்தியில் எழுந்திருக்கும் கொந்தளிப்பின் விளைவாக ஒரு கலைஞர் என்ற ரீதியில், உணர்ச்சிவசப்பட்டு அக் கருத்துக்களைத் தெரிவித்திருக்கலாம். அதற்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை” என இந்த ஆறு ஓய்வுபெற்ற நீதிபதிகள் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

நடிகர் சூர்யாவின் கருத்துக்கள் நீதித்துறயை அவமதிப்பதாகவும், நீதிமன்றத்தை அவமத்தித்ததற்காய் அவர்மீது வழக்குப் பதியவேண்டுமென, தமிழ்நாடு சட்டத்தரணிகள் சங்கமும் (Tamil Nadu Advocates’ Association) கோரியுள்ளது.

Print Friendly, PDF & Email
Related:  எஸ்.பி.பாலாவின் உடல்நிலையில் முன்னேற்றம் - மகன் எஸ்.பி.சரண் அறிவிக்கிறார்
‘நடிகர் சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம்’ – ஆறு ஓய்வு பெற்ற நீதிபதிகள் கடிதம்
நீட் தேர்வுப் பரீட்சைகள் மனுநீதிப் பரீட்சைக்கு ஒப்பானது - நடிகர் சூர்யா

‘நடிகர் சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம்’ – ஆறு ஓய்வு பெற்ற நீதிபதிகள் கடிதம்