Entertainment

நடிகர் கமல்ஹாசனுக்கு கொறோணா தொற்று, மருத்துவ மனையில் அனுமதி


தனக்கு கொறோணா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்று நடிகர் கமல்ஹாசன், இன்று (திங்கள்), தனது ருவிட்டர் செய்தி மூலம் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் அமெரிக்கா சென்று திரும்பியதும் தனக்கு இருமல் இருந்ததாகவும் அது குறித்துப் பரிசோதனை செய்தபோது கொறோணா தொற்று வந்திருப்பது உறுதி செய்யப்பட்டது எனவும், மேலதிக அவதானம் காரணமாக மருத்துவ மனையில் தன்னைத் தனிமைப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தனது 67 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியிருந்த நடிகர் கமலஹாசன், தான் இப்போது தொகுத்தளித்துவரும் ‘பிக் பொஸ்’ ஐந்தாவது சீசன் நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்யப் போவதில்லை எனவும், நவநாகரிக ஆடை அணிகளை வடிவமைக்கும் KH House of Khaddar என்னும் நிறுவனமொன்றை ஆரம்பித்துள்ளதாகவும் சமீபத்தில் சிக்காகோ நகரில் நடைபெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் தெரிவித்திருந்தார். இதற்காக அவர் அமெரிக்கா சென்று திரும்பும்போதே கொறோணா தொற்றுக்கு அவர் இலக்கானார்.

நவம்பர் 7ம் திகதி அவர் தனது 67 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியபோது தான் தயாரிக்கவிருக்கும் 232 ஆவது படமான ‘விக்ரம்’ திரைப்படம் பற்றியும் சுருக்கமாகத் தெரிவித்திருந்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப் படத்தில் விஜே சேதுபதி மற்றும் பிரபல மலையாள நடிகை ஃபஹாட் ஃபாசில் ஆகியோர் நடிக்கிறார்கள்.