த .தே .கூட்டமைப்பு - யப்பானிய ராஜதந்திரி சந்திப்பு -

த .தே .கூட்டமைப்பு – யப்பானிய ராஜதந்திரி சந்திப்பு

Spread the love

ஊடக அறிக்கை

ஜப்பானின் உயர் ராஜதந்திரியும் ஐக்கிய நாடுகள் சபையின் நிர்வாகிகளில் ஒருவருமான மதிப்பிற்குரிய யசூசி அகாசி அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்களை நேற்று கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பின்போது ஆயுத போராட்டம் முடிவிற்கு வந்துள்ள போதும் அதற்க்கு காரணமாக அமைந்த தமிழ் மக்களின் கோரிக்கைகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை என்பதனை இரா. சம்பந்தன் அவர்கள் வலியுறுத்தினார்கள்.

 மேலும் யுத்தத்தினை முடிவிற்கு கொண்டுவருவதில் சர்வதேச சமூகம் பாரிய பங்காற்றியதனை சுட்டிக்காட்டிய இரா சம்பந்தன் அவர்கள் இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வினை எட்டுவது தொடர்பில் இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்த போதிலும் அவற்றில் எதுவும் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

சர்வதேச சமூகம் இனிமேலும் வெறும் பார்வையாளர்களாக இருக்க முடியாது என்பதனை வலியுறுத்திய இரா சம்பந்தன் அவர்கள் சர்வதேச சமூகத்திற்கு கொடுத்த வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கத்திற்கு நினைவூட்டி அவற்றினை நிறைவேற்ற செய்வது சர்வதேச சமூகத்தின்  கடமையாகும் எனவும் வலியுறுத்தினார்.

இந்த வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற தவறுகின்ற பட்சத்தில் அது தமிழ் மக்களிற்கு மாத்திரமல்ல மாறாக முழு நாட்டிற்கும் கேடானதாக அமையும் என்பதனையும் வலியுறுத்தினார்.

இந்த சந்திப்பில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகிரா சுகியாம மற்றும் தூதரக அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
Related:  ரணில் விக்கிரமசிங்க கைதுசெய்யப்படுவாரா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *