த.தே.கூட்டமைப்பு – ஜனாதிபதி சந்திப்பு பின்போடப்பட்டது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவிற்குமிடையே இன்று நடைபெறவிருந்த விசேட சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தினாற் பிற்போடப்பட்டுவிட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்லது.

இவ் விசேட சந்திப்பிற்கான அழைப்பு ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து கூட்டமைப்புக்கு விடப்பட்டதென்றும். நாளை (16) பி.ப. 4:00 மணிக்கு (இலங்கை நேரம்) நடைபெறவிருந்த இச் சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவர்களான இராஜவரோதரயம் சம்பந்தன், மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் ஜனாதிபதி ராஜபக்சவைச் சந்திப்பதாக இருந்தது.

சந்திப்பிற்கான புதியதொரு நாளை, ஜனாதிபதி அலுவலகம் அறிவிக்குமெனெ கூட்டமைப்பின் சார்பில் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிக்கொண்டிருக்கும் நிபுணர் குழுவிடம், த.தே.கூ. தனது பரிந்துரைகளை ஏற்கெனவே சமர்ப்பித்திருந்த நிலையில், இச் சந்திப்பு, அதன் தொடர்ச்சியாக இருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.