Spread the love

விக்னேஸ்வரன் பாராளுமன்றத்தில் சாடல்

செப்டம்பர் 10, 2020: தொல்லியல் காரணங்களைக் கூறி, வடக்கிலும் கிழக்கிலும் தமிழர் தமது நிலங்களில் விவசாயம் செய்வதற்கு புத்த பிக்குகள் தடை விதிப்பது குறித்து, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் திரு சீ.வி.விக்னேஸ்வரன் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

சமீபத்தில். திருகோணமலை குச்சவெளி பிரதேச சபைப் பிரிவிலுள்ள திரியாய் என்னுமிடத்தில் சுமார் 1,000 ஏக்கர் காணியில் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாது என, கிழக்கு தொல்லியல் செயலணி அங்கத்தவரான பிக்கு ஒருவர் தடுத்துள்ளதாக திரு விக்னேஸ்வரன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

“விவசாயமே எங்கள் மக்களின் வாழ்வாதாரம். சுமார் 40% மான எங்கள் மக்கள் விவசாயிகள். சமீப காலங்களில் இவர்களில் பலர் தமது நிலங்களில் விவசாயத்தைத் தொடர முடியாதுள்ளனர்” என அவர் மேலும் தெரிவித்தார்.

“நீங்கள் கூறும் தொல்லியல் பிரதேசங்கள் தமிழ்ப் பெளத்தர்களாலா அல்லது சிங்கள பெளத்தர்களாலா ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது என்பதைக் கூட இன்னும் நாம் அடையாளப்படுத்தவில்லை. அப்படியான இடங்கள் பெளத்த தடயங்களைக் கொண்டிருந்தால் அவற்றைப் பேணைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அப்பிரதேசத்தில் வாழும் தமிழர்களுக்கே உரியது, பரந்த சிங்கள செயலணிக்கல்ல.

“சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் தென்னாசிய வரலாற்றில் நிபுணத்துவம் வாய்ந்த வரலாற்றாசிரியர்களைக் கொண்டவர்களைக் கொண்ட குழுவினால் சிங்கள மொழி எப்போது உருவாகியது என்பதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். பெளத்த மதமும், சிங்கள மொழியும் சமகாலத்தவை அல்ல” என திரு விக்னேஸ்வரன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் தமது நிலங்களில் தொடர்ந்தும் விவசாயம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் எனவும், இது குறித்து பிரதமர் கவனம் செலுத்தவேண்டும் எனவும் திரு விக்னேஸ்வரன் கேட்டுக்கொண்டார்.

Print Friendly, PDF & Email
Related:  இலங்கை | வருமானம் குறைந்த குடும்பங்களிலுள்ளவர்களுக்கு அரச வேலை வாய்ப்பு - செப்டம்பர் 2 இல் ஆரம்பம்!
தொல்லியல் காரணங்களைக் கூறித் தமிழர் தமது நிலங்களில் விவசாயம் செய்யத் தடை – சீ.வி.விக்னேஸ்வரன்
சீ.வி.விக்னேஸ்வரன்

தொல்லியல் காரணங்களைக் கூறித் தமிழர் தமது நிலங்களில் விவசாயம் செய்யத் தடை – சீ.வி.விக்னேஸ்வரன்