தொண்டமான், முஸ்தாபா, வாசுதேவ, வீரவன்ச அமைச்சர்களாகின்றனர்
கொழும்பு, நவம்பர் 21, 2019
புதிய காபந்து அரசின் 15 பேர் கொண்ட அமைச்சரவை இன்று ஜனாதிபதி ராஜபக்சவால் அறிவிக்கப்பட்டது.

இவற்றில் ஏழு, பொதுஜன பெரமுன கட்சிக்கும், ஐந்து பங்காளி கட்சிகளுக்கும் மீதி மூன்று சுதந்திரக் கட்சிக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டன.
ஐந்து பங்காளிக் கட்சிகளின் சார்பில் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, தினேஷ் குணவர்த்தன, வாசுதேவ நாணயக்கார, ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் தெரிவாகியுள்ளனர். தமிழரின் பிரதிநிதியாகத் தொண்டமான் தெரியப்பட்டுள்ளார் என அறியப்படுகிறது.

சுதந்திரக் கட்சி சார்பில் தெரியப்பட்ட மூவரில், ஃபைசர் முஸ்தாபா, முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவார்.
பொதுஜன பெரமுனவின் ஏழு அமைச்சர்களில், பெண் பிரதிநிதியாக திருமதி பவித்ரா வன்னியாராச்சி தெரிவாகுவார் என எத்ரிபார்க்கப்படுகிறது. மீதி ஆறு அமைச்சுகளுக்கும் பெர்முனவின் 50 உறுப்பினர்கள் போட்டியிடுகிறார்கள்

அதே வேளை, மஹிந்தானந்த, ஜோன்ஸ்ரன், றோஹித ஆகியோர் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளன என்ற காரணத்துக்காக அவர்களை அமைச்சுப் பதவிகளிலிருந்து விலக்கி வைக்கப்பட்டபின், பல வழக்குகளை எதிர்கொள்ளும் விமல் வீரவன்சவுக்கு எப்படி அமைச்சுப் பதவி வழங்கமுடியும் என்ற கேள்வியும் எழுப்பபட்டு வருவதாக அறியப்படுகிறது.
அமைச்சரவையில் ஊழல் செய்தவர்கள் இருக்க முடியாது என ஜனாதிபதி சூளுரைத்தது நினைவுகொள்ளத் தக்கது.