தேர்தலைப் பின்போடும்படி த.தே.கூ. அரசாங்கத்திடம் கோரிக்கை

Spread the love

மார்ச் 16, 2020

ஊடக அறிக்கை

இவ் அறிக்கையானது தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சி தலைவர்களின்
கலந்துரையாடலின் பின்னர் விடுக்கப்படுகின்றது:

நாட்டில் தற்போது நிலவுகின்ற COVID 19 வைரஸ் பரவுகின்ற அபாயம் சம்பந்தமாக
அரசாங்கம் தகுந்த, உரிய நடவடிக்கககள் அனைத்தையும் உடனடியாக எடுக்கவேண்டும். மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டுமெனவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுக்கின்றது. இவ் விடயத்தில் முற்று முழுதான எமது பங்களிப்பினை வழங்குவதற்கு நாம் தயாராகவுள்ளோம்.

மக்களுடைய பாதுகாப்பிற்கு அதியுச்ச கரிசனை வழங்கப்படவேண்டும் என்பதாலும், இவ்வசாதாரண சூழ்நிலையில் ஜனநாயக நடவடிக்கைகளை முழுமையாகச் செயற்படுத்த முடியாத காரணத்தாலும், ஏப்ரல் 25ம் திகதி நடைபெறவிருக்கின்ற பொதுத் தேர்தலைப் பிற்போடுமாறு நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.

எம்.ஏ.சுமந்திரன்
ஊடகப் பேச்சாளர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
Print Friendly, PDF & Email
Related:  இலங்கை மனித உரிமை ஆணையத்தின் தலைவர் அம்பிகா சற்குணநாதன் பதவி விலகினார்!

Leave a Reply

>/center>