தேர்தலுக்கு முன் 20வது திருத்தத்தை நிறைவேற்றுங்கள் - சுமந்திரன் -

தேர்தலுக்கு முன் 20வது திருத்தத்தை நிறைவேற்றுங்கள் – சுமந்திரன்

Spread the love

ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் பாராளுமன்றத்தில் அரசியலமைப்பின் 20வது திருத்தத்தை நிறைவேற்றி நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்து விடுங்கள் என த.தே.கூ. பா.உ. சுமந்திரன் வேட்பாளர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். தேர்தலுக்குப் பின்னர் 20 வது திருத்தம் நடைமுறைக்கு வந்ததும் பொதுசன் வாக்கெடுப்பை வைத்துக்கொள்ளலாம் என அவர் டெய்லி மிரர் பத்திரிகைக்குக் கொடுத்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

“இந்தத் தேர்தல் நடைபெற்க் கூடாது என்பதுவே எனது கட்சியின் நிலைப்பாடு. அதியும் மீறித் தேர்தல் நடைபெறுமாயின் நாங்கள் போட்டியிடும் வேட்பாளருடன் பேசுவோம். எங்கள் ஆதரவு தமிழர் தேசியப் பிரச்சினையைத் தீர்க்க அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதையும், நிறைவேற்று அதிகாரங்களுடான ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதில் அவர்கள் எடுக்கப்போகும் நிலைப்பாட்டையும் பொறுத்தே இருக்கும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

20வது திருத்தத்தைக் கொண்டுவருவதில் ஏனையவர்களுக்கு உண்மையான விருப்பம் இருந்தால், ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர், நான் ஜே.வி.பி. கட்சியின் மூலம் அத் திருத்தத்தைப் பாராளுமன்றத்தில் முன்மொழியச் செய்வேன். த.தே.கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கு இதுவரை எந்தவொரு வேட்பாளர்களும் உறுதியான பதிலெதையும் கொடுக்கவில்லை. எனது கட்சி இது பற்றி விளக்கமாக (அவர்களுடன்) கதைக்கும்” எனச் சுமந்திரன் தெரிவித்தார்.

கடந்த வியாழக்கிழமை அவசரம் அவசரமாகக் கூட்டப்பட்ட மந்திரிசபைக் கூட்டம் பற்றிக் கேட்டபோது, அது மைத்திரிபால சிறீசேனவினால் கூட்டப்பட்டதென்றும் ஆனால் பழி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீது விழுந்தது என்றும் அவர் கூறினார்.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
Related:  புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கு எமது ஆதரவுண்டு - பா.உ. சுமந்திரன்