தெஹியோவித்த தமிழ் மகாவித்தியாலய விஞ்ஞானகூடம் திறப்பு
பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ மனோ கணேசன் அவர்களுடைய கோரிக்கையை ஏற்று மண்சரிவினால் பாதிக்கப்பட்ட தெஹியோவித்த தமிழ் மகாவித்தியாலய உயர்தர மாணவர்களுக்கென கனடிய தமிழர் பேரவை (CTC) மற்றும் வட அமெரிக்க தமிழ்ச்சங்கங்களின் பேரவையும் (FETNA) இணைந்து நிறுவித்தந்த விஞ்ஞான ஆய்வுகூடம் நேற்று (மார்ச் 03) அன்று இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனடிய உயர் ஸ்தானிகர் திரு எறிக் வால்ஷ் மற்றும் கனடிய தமிழர் பேரவை நிர்வாகப் பணிப்பாளர் திரு டான்ரன் துரைராஜா அவர்களால் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. இது குறித்து பா.உ. கெளரவ மனோ கணேசன் அவர்கள் கனடிய, அமெரிக்க தமிழர்களுக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.




